×

திரிபலா சூரணத்தை,வெந்நீருடன் கலந்து இரவு  பருகினால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 

பொதுவாக நாட்டு வைத்தியத்தில் அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளது .அதிலும் திரிபலா சூரணம் என்று ஒரு சூரணம் உள்ளது .இதை சாப்பிட்டால் ஒரே மருந்தில் பல நோய்களை குணப்படுத்தலாம் .அப்படி திரிபலா சூரணம் மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம் 
1.சிலர் இருமலால் அவதி படுவர் .இந்த வறட்டு இருமலினால் அவதிப்படுவோர்கள் சிறிதளவு திரிபலா சூரணத்தை வெந்நீருடன் கலந்து குடித்தால் குணமாகும் 
2.சிலருக்கு வயிற்றுவலி இருக்கும் .இந்த வலி மற்றும் ,நெஞ்செரிச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள்,ஒரு கிராம் அளவு திரிபலா  சூரணத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் குணமாகும் 
3.சிலருக்கு மலசிக்கல் இருக்கும் .இந்த மலச்சிக்கலுக்கு இரண்டு கிராம் திரிபலா சூரணத்தை,வெந்நீருடன் கலந்து இரவு தூங்கும் முன் பருகினால் நலம் .
4.சிலருக்கு மலம் கழிக்கையில் இரத்தம் வரும் .இந்த நோய் மட்டுமல்லாமல் ,பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு,பௌத்திர நோயில் காணும் சலம் இவற்றிற்கு,1-2 கிராம் அளவு திரிபலா சூரணத்தை தேனுடன் கலந்து காலை-மாலை உண்ணலாம்.
5.சிலருக்கு சர்க்கரை நோயிருக்கும் .இந்த  சர்க்கரை நோயுள்ளவர்கள், மூன்று கிராம் அளவு திரிபலா சூரணத்தை வெந்நீருடன் கலந்து காலை,மாலை பயன்படுத்தினால் சர்க்கரை நோய் குணமாகும்  
6.சிலர் உடற்பருமனை குறைக்க விரும்புவர்.இப்படி விரும்புவோர் ,காலை மாலை உணவிற்கு முன் ஒரு கிராம் அளவு திரிபலா சூரணத்தை சுடுநீருடன் கலந்து பருக குணமாகும்