×

டாய்லெட் போக  கஷ்டப்படுறவங்க இந்த இஷ்டப்பட்ட உணவை தொடாதிங்க.

 

 இன்றைக்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அலங்காரமாக விற்கப்படும் `ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை, நம் ஜீரண நலத்துக்குச் சிக்கலை ஏற்படுத்துபவை. காலை எழுந்ததும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை. 

நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகியவலியுடன் கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் ‘மலச்சிக்கல்’ என வரையறுக்கிறது. ஆனால், பாரம்பர்ய மருத்துவம் அனைத்துமே, எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகின்றன. ‘கட்டளைக் கலித்துறை’ நூல், நாள் ஒன்றுக்கு மூன்று முறை மலம் கழிப்பது நல்லது என்கிறது. சித்த மருத்துவ, `நோய் அணுகா விதி’, மலத்தை அடக்கினால் ஏற்படும் பின் விளைவுகளைச் சொல்கிறது...

மலச்சிக்கல் என்பதை தினசரி மலம் கழிக்க முடியாமல் இருப்பது மற்றும் மலத்தை வெளியேற்ற கஷ்டப்டப்படும் நிலையை குறிக்கும்.

சில நேரங்களில் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கி விடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மலச்சிக்கல் என்பது மிகவும் பொதுவான நிலைகளில் ஒன்றாக இருந்தாலும் வலி மற்றும் அசௌகரியம் தவிர, மக்களுக்கு ஒரு சங்கடமான நிலையாக இருக்கிறது. வாழ்க்கை முறை பழக்கங்கள் முதல் உணவு முறை மாற்றங்கள் வரை தொந்தரவுக்கு உள்ளாகும் குடல் இயக்கங்கள் பல்வேறு காரணிகளிலிருந்து உருவாகின்றன. மலச்சிக்கலுக்கு பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கின்றன.

ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடல் உழைப்பின்மை, அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, சில மருந்துகளின் பக்க விளைவுகள், அடிப்படை சுகாதார சிக்கல் , நார்ச்சத்து குறைந்த உணவுகளை உண்பது, தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.

தயிர் சுவையானது, இயற்கையில் சூடான தன்மை கொண்டது. இது மேலும் மனம் மற்றும் உடலில் உள்ள அனைத்து இயக்கங்களையும் நிர்வகிக்கிறது. இது இயற்கையில் உறிஞ்சக்கூடியது மற்றும் ஜீரணிக்க கடினமானது. இது “மலச்சிக்கலுக்கு பொருந்தாது.” எனவே உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், குணமாகும் வரை தயிரை தவிர்க்கவும

பால் பெருக்கி இலையை வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.

நில ஆவாரை இலையைத் துவையலாக அரைத்து, இரவு வேளையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை படிப்படியாகக் குறையும்.

 

கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொறித்த பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு இடித்து, சூரணம் செய்து, சூடான சாதத்துடன் கலந்து நெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்.

அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.