×

குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனையை  ஓவர் நைட்ல சரி செய்யலாம் 

 

பொதுவாக நிறைய குழந்தைகளுக்கு மல சிக்கல் பிரச்சினை இருக்கும் .இந்த மலசிக்கல் பிரச்சினை தீர பல்வேறு இயற்கை வழி முறைகள் உண்டு .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனைக்கு, மரபு வழி காரணங்கள் காரணமாக இருக்கலாம் , 
2.குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நார்ச்சத்து இல்லாத உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் அதிகமாக பசும்பால் குடிப்பது என பல காரணங்கள் இருக்கலாம்.  
3.சரியான உணவுப் பழக்கங்களை பின்பற்றி குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனையின் தீவிரத்தை நம்மால் குறைக்க முடியும்.
4.பொதுவாக ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் போதுமானது. 
5.இந்த அரை லிட்டரை விட  அதிகமாக ஒரு குழந்தை தொடர்ந்து குடித்தால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. 
6.எனவே குழந்தை பாத்ரூம் போகும் போது அழுதால், முதலில் உங்கள் குழந்தை குடிக்கும் பாலின் அளவை பரிசோதனை செய்யவும் 
7.குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனைக்கு போதுமான அளவில் தண்ணீர் குடிக்காவிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும் . 
8.குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனை தீர எனவே குழந்தைக்கு நிறைய தண்ணீர் கொடுங்கள். 
9.சில குழந்தைகள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் தண்ணீரின் சுவையை மாற்றி கொடுக்கலாம். 
10.உதாரணமாக சீரக தண்ணீர் அல்லது ஓமம் போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் என மாற்றி மாற்றி முயற்சித்து பாருங்கள்.