×

வாய் துர்நாற்றம் நீங்க உதவும் வழிகள் 

 

பொதுவாக நம் வாயில் பல்வேறு கிருமிகள் உள்ளன .இந்த கிருமிகளால்தான் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது .இதனால் இந்த வாய் துர் நாற்றம் உடையோர் எதிரே இருப்பவரிடம் பேச கூட அஞ்சுவது உண்டு .இந்த துர் நாற்றம் போக்க சில எளிய வழிகளை பின்பற்றலாம் 

1.வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம். 
2.வாய் துர்நாற்றம் நீங்க சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய் கொப்பளிக்க தவறாதீர் 
3..வாய் துர்நாற்றம் நீங்க இரவு படுக்க போகும் முன் ஒருதடவை பல்துலக்கலாம். 
4.இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும். 
5.வாய் துர்நாற்றம் நீங்க  ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்கள் படும் படி தேய்க்க வேண்டும். 
6.வாய் துர்நாற்றம் நீங்க பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும்.
7.வாய் துர்நாற்றம் நீங்க  பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்தினால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படும். 
8.வாய் துர்நாற்றத்தைப் போக்க  சூயிங்கம், மவுத் பிரெஷ்னர் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
9.. வாய் கொப்பளிக்கும் நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
10. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை மென்று வாயில் அடக்கிக் கொள்ளலாம். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படாது