×

ஆரோக்கியத்துக்கு எப்படி எண்ணெய் தேய்த்து குளிக்கணும்  தெரியுமா ?

 

பொதுவாக எண்ணெய் தேய்த்து குளித்தால் பல நோய்கள் பறந்து ஓடிவிடும் என்று சித்த மருத்துவம் அடித்து கூறுகிறது .ஆனால் நம்மில் பலருக்கும் அந்த பழக்கம் நாகரீகம் என்ற பெயரில் அறவே இல்லை .இந்த எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது என்ன செய்யலாம் ,செய்ய கூடாது என்று சித்த மருத்துவம் கூறுவது பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம் 

1.சிலர் எண்ணெய் தேய்த்தவுடன் குளிப்பர் .அப்படி உடனே குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். 
2.அவ்வாறு அரை மணி நேரம் கழித்து குளிக்கும் போது எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படும். 
3.ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி. நல்லெண்ணெய் எடுத்து கொள்ளலாம் .
4.நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும் .அதன் பின்  இளஞ்சூடான வெந்நீரில் சீயக்காய் தேய்த்து குளிக்க நல்ல பலன் கிட்டும்  
5.எண்ணெய் தேய்த்து குளிக்க அதிகாலையிலேயே சிறந்த நேரம் 
6.வாரமிருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் .அதாவது, ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் குளிப்பது நலம் 
7.பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 
8.எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு அதிக வெயிலில் அலையக்கூடாது. 
9.எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு குளிர்ந்த உணவுகளான பானங்கள், ஐஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது. 
10.எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, உடலுறவு வைத்து கொள்ளக் கூடாது. 
11.எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு நண்டு, கோழி, மீன், செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத்  தவிர்த்து விட வேண்டும்.