×

உடலில் இந்த விட்டமின் குறைஞ்சா ,எதிர்காலத்தில் உங்க வீட்டுக்கே வழி தெரியாம போகுமாம்

 

நம் உடலுக்கு வைட்டமின் சத்துக்களே ஆற்றலை வழங்குகிறது. ஒவ்வொரு வகையான வைட்டமின்களும் தனி தனி உறுப்புகளுக்கு பயனளிப்பதாய் இருப்பதால் தினசரி உணவில் அனைத்து வைட்டமின்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. வைட்டமின் பி என்பது நீரில் கரையக்கூடிய தன்மை கொண்டது. இது நம் உடலின் அன்றாட செயல்பாட்டிற்கு அத்தியாவசிய வைட்டமினாக உள்ளது.


வைட்டமின் பி 12 போதுமான அளவில் கிடைக்கவில்லை எனில் அது உடலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் பெரும்பாலான மக்கள் வைட்டமின் பி குறைபாட்டை கண்டுக்கொள்வது இல்லை. ஏனெனில் இந்த குறைபாடு ஏற்பட்டு பல ஆண்டுகள் கழித்தே அதன் அறிகுறிகள் தெரியும். மேலும் இந்த குறைபாடானது தேவையற்ற சில சிக்கல்களை உடலில் ஏற்படுத்தும். மூளை வளர்ச்சி பிரச்சனைகள், நரம்பு மண்டல சேதம் மற்றும் இரத்த சோகை போன்றவை இதனால் ஏற்படும் பாதிப்புகளாக உள்ளன.

முக்கியமாக 8 வகையான வைட்டமின் பி உள்ளது. அனைத்து வகையான வைட்டமின் பிகளின் குழுவும் பி-காம்ப்ளக்ஸ் (B-Complex) என்று அழைக்கப்படுகிறது.

வைட்டமின் பி1 (தியாமின்)

வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்)

வைட்டமின் பி3 (நியாசின்)

வைட்டமின் பி5 (பாந்தோதெனிக் அமிலம்)

வைட்டமின் பி6

வைட்டமின் பி7 (பயோட்டின்)

வைட்டமின் பி9 (ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம்)

வைட்டமின் பி12

வைட்டமின் B குறைபாட்டால்  ஏற்படும் நோய்கள்

சில வகையான வைட்டமின் பி குறைபாடு மற்றவற்றை விட ஆபத்தானது என கூறப்படுகிறது.

உடலில் வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 குறைபாட்டின் அறிகுறிகள்

இந்த இரண்டு வைட்டமின் பி குறைபாடு நரம்பு மண்டலம், தோல், கண்கள் போன்றவற்றை பாதிக்கிறது. இது இந்த உறுப்புகளை வலுவிழக்கச் செய்து வாயில் புண்கள் அல்லது கொப்புளங்களை ஏற்படுத்தும்.

வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 நிறைந்த உணவுகள்:

முழு தானியங்கள், மீன், பருப்புகள், முட்டை, ப்ரோக்கோலி மற்றும் கீரை, குறைந்த கொழுப்புள்ள பால் போன்ற பச்சை காய்கறிகள்.

வைட்டமின் பி3 குறைபாட்டின் அறிகுறிகள்:

குழப்பம், வாந்தி, சோர்வு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு, நாவின் அடர் சிவப்பு நிறம், கரடுமுரடான தோல், செரிமானம் பாதிப்பு, குமட்டல், வயிற்றுப் பிடிப்பு போன்றவை.

வைட்டமின் பி3 நிறைந்த உணவுகள்:

வேர்க்கடலை, இறைச்சி, மீன் போன்றவை.

உடலில் வைட்டமின் பி9 குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்:

சோர்வு, கவனம் இல்லாமை, எரிச்சல், வேகமான இதயத் துடிப்பு அல்லது பதட்டம், மூச்சுத் திணறல், மெகாலோபிளாஸ்டிக் அனீமியா, தோல்-முடி-நகம் நிறத்தில் மாற்றங்கள் போன்றவை.

வைட்டமின் பி9 நிறைந்த உணவுகள்:

கீரை, ஆரஞ்சு, வேர்க்கடலை, ராஜ்மா, பட்டாணி போன்றவை.

உடலில் வைட்டமின் பி6 குறைபாட்டின் அறிகுறிகள்

மனச்சோர்வு, குழப்பம், குமட்டல், இரத்த சோகை, அடிக்கடி தொற்று ஏற்படுதல், தோல் வெடிப்பு அல்லது தோல் அழற்சி போன்றவை.

வைட்டமின் பி6 நிறைந்த உணவுகள்:

உருளைக்கிழங்கு மற்றும் மாவுச்சத்துள்ள காய்கறிகள், சிட்ரஸ் மற்றும் பிற பழங்கள், மீன் போன்றவை.

உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

சோர்வு, பலவீனம், மலச்சிக்கல், பசியின்மை, திடீர் எடை இழப்பு, கை கால்களில் உணர்வின்மை, பலவீனமான நினைவாற்றல், வாய் மற்றும் நாக்கில் வீக்கம் போன்றவை.

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்:

முட்டை, தாவர பால், பால், பாலாடைக்கட்டி, மீன், கோழி போன்றவை.