×

இதயம் முதல் நுரையீரல் வரை காக்கும் வெந்தய கீரை அல்வா 

 


பொதுவாக வெந்தயத்திற்கு மருத்துவ குணம் ஏராளமாக உள்ளது .இது சுகர் பேஷண்ட் முதல் உடல் உஷ்ணம் வரை குணப்படுத்தும் தன்மை உண்டு .அதே போல வெந்தய கீரையும் நல்ல மருத்துவ குணமுள்ள ஒரு கீரை .இதை கடைந்தும் சாப்பிடலாம் , இல்லையெனில் சிறுவர்களுக்கு பிடித்த வண்ணம் அல்வா போல கிளறியும் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் 


இந்த வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்து தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வரலாம் இதன் மூலம் 
1.உடல் சூடு தணிந்து சமப்படும்.
2. சீதபேதி குணமாகும்.
3.வயிற்றுப் போக்கை நிறுத்தும்.
4.மாதவிடாய் தொல்லை நீங்கும்  
5.உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.
6.உடலுக்கு நல்ல பலம் தரும்.

அடுத்து இந்த மருத்துவ குணமுள்ள வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்தும் சாப்பிடலாம் .இந்த கூட்டை  பகலில் சாப்பிட்டால்  மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும்.உடலின் வாய்வு கலைந்து உடல் முழு ஆரோக்கியமாக மாறிவிடும் .அது மட்டுமல்லாமல் இந்த வெந்தய கீரை கூட்டு மூலம் 
வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து ,வயிறு சப்பையாக மாறி வயிறு பிரச்சினை தீர்ந்து விடும் 
அடுத்து இந்த வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சிவிடுங்கள் .இந்த சுண்ட காய்ச்சிய வெந்தய கீரையை , காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.இவ்வளவு சக்தியுள்ள வெந்தய கீரையை பல விதமாக நமக்கும் சிறுவர்களுக்கும் பிடித்த வண்ணமாக சமைத்து  சாப்பிட்டு பயன் பெருங்கள்