தர்ப்பை புல்லை தண்ணீரில் போட்டு குடிச்சா ,பல மாத்திரைகளை குப்பையில் போட்டுடலாம்
தருப்பைப்புல் என்பது Desmostachya bipinnata என்ற அறிவியல் பெயர் கொண்ட புல்வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும். இதில் பல வகைகள் உண்டு. தருப்பைப் பொதுவாக ஆங்கிலத்தில் ஆல்பா புல் (Halfa Grass), Big cordgrass, மற்றும் உப்புக்கோரைப்புல் (Salt reed-grass) என அறியப்படுகிறது.
நாட்டுப்புற மருத்துவத்தில் தருப்பையானது வயிற்றுக்கடுப்பு மற்றும் பெரும்போக்கு எனப்படும் மாதவிடாய் மிகைப்பு, மற்றும் டையூரிடிக் எனப் பல்வேறுநோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் யுனானி மருத்துவத்திலும், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
பித்ரு பரிகாரங்கள் செய்வதற்கு மோதிரவிரலில் தர்ப்பைப் புல்லை அணிவது வழக்கம். மற்ற சுப காரியங்களிலும் மோதிர விரலில் தர்பை புல் அணிந்து கொள்வது இறை ஆற்றலை பெறுவதற்கு தான். மோதிர விரல் வழியாக சக்திகள் ஊடுருவி வலது மூளைக்கு சென்று தூண்டிவிடப்பட்டு நம்முடைய எண்ண ஓட்டத்தை தெளிவடைய செய்யும். அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மகத்துவம் வாய்ந்த தர்ப்பை புல்லை எல்லோருடைய வீட்டிலும் பூஜை அறையில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம்.
. தர்ப்பைப் புல்லால் செய்யப்பட்ட பாய், தலையணை, தியான விரிப்புகள் ஆகியவற்றை நம் வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. தியானம் செய்பவர்கள் தர்ப்பைப்புல் கொண்ட விரிப்புகளில் உட்கார்ந்து தியானம் செய்யும் பொழுது விரைவாகவே தியான நிலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். உடலில் இருக்கும் பல்வேறு நோய்கள் தீர தர்பை புல் பாய் விரித்து கொண்டு தினமும் இரவு தூங்கி பாருங்கள்.
தர்பை, குளிர்தன்மையைக் கொண்ட தாவரம். அதனால், சூடு, வெப்பம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க இது உதவுகிறது. அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.
ஒரு சில துண்டு தர்பையை குடிநீர்ப் பானையில் போட்டுவைத்து, அந்த நீரை அருந்தினால், அது வெயிலின் தாக்கத்தை குறைத்து, குளுமையைக் கொடுக்கும். கிரகணங்கள் ஏற்படும்போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு வைத்தால், கிரகணத்தால் ஏற்படும் தீயவிளைவுகள் பொருட்களை பாதிக்காது என்பது இந்தியாவில் தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஆகும்.
தர்பைப் புல் இருக்கும் இடத்தில் தொற்றுநோய் ஏற்படாது என்பதால், கிராமங்களில் வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். தர்பைப்பைப் புல் பொதுவாக எல்லா இடங்களிலிலும் வளராது, மிகவும் தூய்மையான இடங்களில் மட்டுமே வளரும் என்றும் கூறப்படுகிறது.
இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட தர்பைப் புல்லை குடிநீரில் போட்டு வைத்து, அந்த நீரைக் குடித்தால் சர்க்கரைநோய் கட்டுப்படும் என்றும் சொல்லப்படுகிறது. சிறுநீரகம், கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் குணமாகும்.