புதினா எண்ணெய்யை நெற்றில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால் எந்த நோய் விலகும் தெரியுமா ?
புதினாவை பற்றி இப்பதிவில் காண்போம்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
புதினாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் புதினா நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நாம் தினமும் சாப்பிடும் உணவில் சிறிதளவு புதினாவை சேர்த்துக் கொள்வது நமது உடல் நலத்தை அதிகரிக்கும்.
துர்நாற்றத்தை எதிர்த்து செயல்படுகிறது:
புதினாவிற்கு கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை உண்டு. இது அனைவரும் அறிந்ததே. புதினா இலைகளை வெறும் வாயில் மென்று விழுங்கும் போது, அவை வாயில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. வாய் நறுமணத்துடன் இருக்க பெரிதும் உதவுகிறது.
அஜீரணத்தை குறைக்கிறது:
அஜீரணத்தால் அவஸ்தை படும்போது, புதினா ஒரு சிறந்த தீர்வாகிறது. புதினாவை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது , செரிமானத்தை வலுப்படுத்தும் என்சைம்களை ஊக்குவிக்கிறது. உமிழ்நீர் சுரப்பியை அதிகரிக்கிறது. இதனால் செரிமானம் விரைந்து நடக்கிறது. அஜீரணம் குறைகிறது. ஒரு கைப்பிடி புதினாவை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் 5 நிமிடம் ஊறவைத்து , அந்த நீரை தொடர்ந்து பருகி வர, அஜீரணம் மட்டுப்படுகிறது.
குமட்டல் மற்றும் தலைவலி குறைகிறது:
புதினா, அழற்சியை குறைக்கும் தன்மை கொண்ட ஒரு உணவு பொருள். ஆகவே தலைவலி அதிகமாகும் போது, சிறிதளவு புதினா எண்ணெய்யை நெற்றில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யும் போது தலைவலியும் அதனால் உண்டாகும் குமட்டலும் கட்டுப்படும்.
சுவாச கோளாறுகளை தடுக்கிறது:
நுரையீரலில் சுவாசம் தொடர்பான தொந்தரவுகளுக்கு புதினா இலைகள் சிறந்த தீர்வாக அமைகின்றன. புதினாவில் ரோச்மரினிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம், சுவாச மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் கூறுகளை தடுக்கிறது