வயதானவர்கள் இதை இரவில் சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம்.
பொதுவாக பால் நமக்கு நன்மை தரும் ஒரு பானம் .ஆனால் அதில் உள்ள சில பொருட்கள் சிலருக்கு அலர்ஜி கொடுக்கும் ,அதனால் அவர்கள் பால் சாப்பிடுவதை தவிர்க்கலாம் .மேலும் பாலில் கால்சியம் சத்துக்கள் நிறைய அடங்கியுள்ளது ,இது எலும்புக்கு நல்லது ,இரவில் யார் பால் சாப்பிடலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக டாக்டர்களில் சிலர் இரவில் பால் சாப்பிடலாம் ,அது நல்லது என்று கூறுகின்றனர் .
2.ஆனால் இன்னும் சில டாக்டர்கள் இரவில் பால் சாப்பிடக்கூடாது அது ஆரோக்கியத்துக்கு கேடு என்றனர் . இது இரண்டில் எது சரியென்று பார்க்கலாம்
3.‘பொதுவாக இரவில் தூங்கச் செல்லும் முன்பு யார், யார் பால் சாப்பிடலாம், யார், யார் பால் சாப்பிடக்கூடாது என்று சில கோட்பாடுகள் இருக்கின்றன .
4.சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகமாட்டேங்குதே என்று வருத்தப்படுவார்கள் அவர்கள் , இரவு தூங்கச் செல்லும் முன்பு தாராளமாக நிறைய பால் குடிக்கலாம்
5.பொதுவாக வளரும் குழந்தைகள், நல்ல உடல் வளர்ச்சி பெற விரும்பும் பெற்றோர் அவர்களுக்கு இரவில் தூங்கச் செல்லும் முன்பு, ஒரு டம்ளர் பால் கொடுக்கலாம்
6.பால் என்பது ஒரு வகையில் மயக்கத்தைக் கொடுக்கிற பானம். வயதானவர்கள் இரவில் சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம்.
7.ஆனால், உடலில் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள்,இரவில் பால் சாப்பிட கூடாது
8.மேலும் உடல் இளைக்க வேண்டும் என்று நினக்கிறவர்கள், இரவில் பால் குடிக்க கூடாது
9.உடல் உழைப்பு நிறய செய்யாதவர்கள் இரவில் பால் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.