மன தக்காளி கீரையின் இலைகளை மென்று சாப்பிட்டு வர என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு ஏரளமான நன்மையை அளிக்கும் .அதிலும் மன தக்காளி கீரை மூலம் ஒன்றல்ல இரண்டல்ல பல நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கலாம் .அந்தவகையில் மன தக்காளி மூலம் குணமாகும் நோய்கள் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக ஆரோக்கியம் தரும் மணத்தக்காளி கீரையை குழம்பு, சூப், கூட்டு செய்து சாப்பிடலாம்.
2.இந்த மன தக்காளி கீரையில் விட்டமின் ஈ மற்றும் விட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.
3.தொடர்ந்து மன தக்காளி கீரையினை சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் குணமாகும், மேலும் இதிலுள்ள விட்டமின்கள் கண் பார்வை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
4.இந்த மன தக்காளி கீரையின் பழத்தை சாப்பிடுவதால் காசநோய் பிரச்சனைகள் குணமாகும். குழந்தைகள் நன்றாக ஊட்டம் பெற மணத்தக்காளியில் ரசம் வைத்து கொடுக்கலாம்.
5.இந்த மன தக்காளி கீரையின் இலைகளை மென்று சாப்பிட்டு வர வாய்ப்புண் பிரச்சினை குணமாகும்.
6.மேலும் மன தக்காளி கீரை இருதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும். மன தக்காளி கீரை களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.
7.மன தக்காளி கீரை மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும். மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும்.
8.மன தக்காளி கீரை சிறுநீர், வியர்வையைப் பெருக்கி என உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.
9.உடற்சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் உடற்சூடு குறையும்.
10.மன தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.