×

கற்பூரவள்ளி பழத்தின் அற்புத குணம்  தெரிஞ்சா அதன் தோலை கூட தூக்கி போடமாட்டிங்களாம்

 

மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே. எந்தக் காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் இது. சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது இப்பழம் குழந்தைகள் முதல் குடுகுடு கிழவன் விரும்பி உண்ணும் பழம் .இப்பழங்கள் அளவு, நிறம், கெட்டியான தன்மை என்பவற்றால் பல வகைகளாக உள்ளபோதிலும், இவை பொதுவாக நீண்டு வளைந்திருக்கும்

இதற்கு கற்பூறவள்ளி, தேன் வாழைப்பழம் என்றும் பெயர் உண்டு
சிறிய அளவில் இருக்கும்
இனிப்புச் சுவை கொண்டது. நல்ல ருசியாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் நன்கு பயன்படுகிறது.
தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது
தலைபாரம் நீங்கப் பயன்படும்.
சாம்பல் கலந்த பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும்
தோல் கருத்த பின்பும் பழம் உண்ண உகந்தது
பழம் நடுவில் விதைகள் சற்று அதிகம் உள்ளது

மருத்துவ குணம் கொண்ட கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் அற்புத நன்மைகள் என்னவென்று கீழே பார்ப்போம்.

* பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி - 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

* கற்பூரவள்ளி வாழைப்பழத்தில், அதிக அளவு செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ஜீரன சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

* கற்பூரவள்ளி வாழைப்பழம் எலும்புகளுக்கு நல்லது. ஏனெனில் இதில் உள்ள மேங்கனீஷ், மெக்னிஷியம் எலும்புகளை பலப்படுத்த உதவும்.

* இந்த பழம், தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது.

* உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும்.

* கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் தோலை வீணாக்காமல் அதை சிறுசிறு துண்டாக வெட்டி மூன்று நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம்.

அதிகமானோர், காலை உணவை சரிவர எடுத்துக்கொள்வதில்லை, இது முற்றிலும் தவரான செயலாகும். அகவே, காலை உணவோடு சேர்த்து, வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம், அதிக நன்மைகளை பெறலாம். இது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலை வழங்குகிறது . மேலும் பல நோய்களில் இருந்து நம்மை காக்க வல்லது. வேலை செய்யும் போது சோர்வாகவோ அல்லது மன அழுத்தம் ஏற்பட்டாலோ வாழைப்பழம் சாப்பிடுங்கள்.