×

தூங்குறதுக்கு முன்னாடி இதை குடிச்சா ,கொரானாவை கூட கூறு போடலாம்

 

உணவு, உடை, இருப்பிடம்போலவே நம் அன்றாட வாழ்வுக்கு தண்ணீர் மிக அவசியம். உடல் வெப்பநிலையைப் பராமரிக்க, ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்க, நச்சுக்களை அகற்ற... என நீர் ஏராளமான வேலைகளை நமக்குள் செய்கிறது. இரண்டு ஆக்ஸஜனும் ஒரு ஹைட்ரஜனும் சேர்ந்தது நீர் எனப் படித்திருப்போம். அது மட்டுமல்ல, நாம் அருந்தும் நீரில் சோடியம், கால்சியம், மக்னீசியம், தாமிரம் எனப் பல்வேறு தாதுஉப்புக்கள் கலந்திருக்கின்றன
காலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம், நம் உடல் எதிர்கொள்ளும் பெரும்பான்மையான நோய்களுக்குக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை. வெந்நீரோ, சூடான பொருளோ நம் உடலுக்குள் செல்லும்போது, அதிகமாக வியர்க்கும்; உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். இப்படி அதிகரித்த வெப்பநிலையைக் குறைத்து, நம் உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை உற்பத்தியாகிறது. இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர், உப்பு முதலான கழிவுகள் வெளியேறுகின்றன.

எல்லா நேரமும் வெந்நீர் அருந்தலாம். இருப்பினும், அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது.  அதிகாலையில், வெந்நீரை ஆற்றும்போது, காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு, வெந்நீருடன் கலக்கும். ஓசோன் என்பது, சூப்பர் ஆக்சிஜன். அது நம் உடலின் சக்தியைத் தூண்டிவிடும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்தால், செரிமானத்தைத் தூண்டும்.

ஆரோக்கியமாக இருக்கவும், குறிப்பாக, இந்த கொரோனா காலத்தில். தொற்று நோயிலிருந்து தப்பவும், வெந்நீரைக் குடிப்பது மிகச் சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர். 

அதுவும் லேசான வெதுவெதுப்பாகக் குடித்தால், அதன் நன்மைகள் பன்மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் குளிர்ந்த நீருக்கு பதிலாக வெதுவெதுப்பான நீரை குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இரவில் தூங்கும் முன் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம், கொரோனா போன்ற தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு, பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

உடலில் நீர் சத்து குறையாமல் இருக்கும்

குளிர்ந்த நீரைக் குடிப்பதற்குப் பதிலாக, அனைவரும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு, இரவில் தூங்கும் முன் 1 கிளாஸ் சூடாக குடித்து வந்தால், உடலில் நீர்சத்து குறையாமல் பராமரித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது நமது உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்தை வழங்கவும் உதவுகிறது.

உங்கள் மனநிலை சரியில்லாமல் இருந்தால், வெந்நீர் மிகுந்த பலன் தரும். இதன் மூலம் உங்கள் மனநிலை சீராகும் (Mental Health) என்று நம்பப்படுகிறது. தண்ணீர் சத்து பற்றாக்குறையால், உங்கள் மனநிலை எதிர்மறையாக மாறும் என்று கூறப்படுகிறது. அதனால்தான் அதிகமாக குடிக்க வேண்டும். இது மனதை அமைதிப்படுத்தவும் நேர்மறையாகவும் இருக்கவும் உதவுகிறது.

வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான அமைப்புக்கு முக்கியமானது

இது தவிர, வெந்நீர் அருந்துவதால், வளர்சிதை மாற்றமும் மேம்படும். சூடான நீர் உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. எடை இழப்பையும் துரிதப்படுத்துகிறது. இது தவிர, வெந்நீர் குடிப்பது செரிமான அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. செரிமானத்துடன், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், தசைகளை தளர்த்தவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.