×

கத்தரிக்காயை ஒதுக்கி வக்கிறவங்க ,இதை படிச்சா பதுக்கி வச்சி சாப்பிடுவிங்க

 

கத்தரிக்காயை பலர் அது உடலுக்கு அலர்ஜி என்று இலையில் ஒதுக்கி வைத்து விடுவார்கள் .இன்னும் சிலர் அது தோல் பிரச்சினைகளை உண்டு பண்ணும் என்று அதை கடையில் வாங்கவே மாட்டார்கள் ,ஆனால் இப்படி ஒதுக்கி வைக்கும் கத்தரிக்காயில் எவ்ளோ நன்மைகள் அடங்கியுள்ளது என்று தெரிந்தால் அதை பதுக்கி வைத்து சாப்பிடுவீர்கள் .அதற்குள் மூச்சு திணறலை சரி செய்யும் மகத்துவம் அடங்கியுள்ளது .மேலும் தூக்கமின்மை கோளாறு உள்ளவர்கள் முதல் கிட்னி கல் பிரச்சினையுள்ளவர்கள் வரை அதை சாப்பிட்டால் முழு ஆரோக்கியம் கிடைக்கும்

மேலும் கத்தரிக்காயில் நமது மூளை செயல்திறனைஅதிகரிப்பதோடு செல்களின் மெம்பிரேன்களைப் பத்திரமாக காத்துக்கொள்வது மட்டுமில்லாமல் நல்ல நினைவாற்றலையும் நமக்கு அளிக்க உதவி நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது .

இவ்ளோ சக்தி வாய்ந்த கத்தரிக்காயை  தினமும் நீங்கள் உட்கொள்ளும் போது எலும்புகளுக்கு ஆரோக்கியத்திற்கு அளிக்கிறது.மேலும் புற்றுநோய் செல்களிலிருந்து நம்மை பாதுகாக்கப்படுவதையும் இது உறுதி செய்கிறது.

 இந்த கத்தரியை  நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போதுஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகையை தடுக்கிறது . இதனால் உடல் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாய் இருப்பதற்கு உதவியாக உள்ளது.

கத்தரிக்காய் சாப்பிடும் போது உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு இதய நோய் பிரச்சனைகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது  இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர் சத்துக்களால் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கப்பட்டு ,கொலஸ்ட்ரால் பிரச்சனை வராமல் தடுக்கப்படுகிறது .

.

  மேலும் நீரழிவு நோயால் அவதிப்படுவோர் அதை  கட்டுப்படுத்துவதற்கும், மேற்கொண்டு சுகர் அளவு அதிகமாகாமல் வைத்திருக்கவும் உதவியாக உள்ளது.