கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் இப்பருப்பு
பொதுவாக நட்ஸ் வகைகள் நமக்கு ஆரோக்கியம் தர கூடியவை .அதிலும் பாதாம் பருப்பு நமக்கு பல மருத்துவ நன்மைகளை தர கூடியது .அந்த பாதாம் பருப்பை பச்சையாக சாப்பிடுவதை விட ஊற வைத்து சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டு சில நேரம் பசி எடுக்கும்போதோ அல்லது பொடியாக்கி உணவில் கலந்தோ சாப்பிடலாம் .இதனால்என்ன நன்மைகள் உண்டு என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.தினந்தோறும் இருபது முதல் இருபத்தைந்து பாதாம் வரையில் நாம் எடுத்துக் கொள்ளலாம்.
2.இரவு முழுவதும் பாதாமை ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் சாப்பிடலாம். 3., ஏற்கனவே உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புகள், ஆற்றலாக மாற்றப்பட்டு கலோரிகள் எரிக்கப்படுகிறது. இதன் காரணமாக மிக வேகமாக நம்முடைய உடல் எடையை குறைக்க முடியும்.
4.உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் தன்மை, நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பிற்கே அதிகமாக உள்ளது.
5.நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பை உட்கொள்ளும்போது, “, இரத்த அழுத்தத்தைச் சீரானநிலையில் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
6.நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பை உட்கொள்வதால், இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.
7.கற்பிணிப் பெண்களுக்கு நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பில், அதிகஅளவு ஃபோலிக்சத்து கிடைக்கிறது.
8.நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பின் மூலம் இளமையிலேயே முதுமையான தோற்றம் வருவது தடுக்கப்படுகிறது.
9.நீரில் ஊறவைத்து பாதாம்பருப்பை உட்கொள்ளும்போது, வாயுத்தொல்லை உருவாவது தவிர்க்கப்படுகிறது.
10.பாதாம்பருப்பை, நீரில் ஊறவைத்து உண்பதால், செரிமானமண்டலம் சுத்தமாக்கப்பட்டு, புதுப்பொலிவும், புத்துணர்வும் அடைகின்றது.