×

இரவில் இரண்டு ஏலக்காயை இப்படி சாப்பிட்டா உங்க உடலில் எப்படிப்பட்ட மாற்றம் வரும் தெரியுமா ?

 


ஏலக்காய் வாசனை பொருளாக பார்க்கப்படும் நிலையில், அதில் பல இயற்கை நன்மைகள் உள்ளன.  நன்மைகளை பற்றி இங்கு காண்போம்...

1 ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.
2 வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
3 ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
4 சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌ட் என எதையாவது வா‌யி‌ல் போ‌ட்டு அசை போடுவதா‌ல் எ‌ந்த‌ப் பலனு‌ம் இ‌ல்லை. அத‌ற்கு‌‌ப் ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடுவது நல்லது.

ஏலக்காய் சாப்பிடுவது எப்படி?

ஏலக்காயை பல வழிகளில் உட்கொள்ளலாம். இதனை வாய் ப்ரெஷ்னராக நேரடியாகச் சாப்பிடலாம். எந்த உணவையோ அல்லது காய்கறிகளையோ செய்யும் போது, ​​அதனுடன் ஏலக்காய் ஐ சேர்த்து சாப்பிடலாம்.

ஏலக்காயை எந்த நேரத்தில் சாப்பிடலாம்?

இயற்கையாக தூங்க, தினமும் இரவில் தூங்கும் முன் குறைந்தது 3 ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு சாப்பிடுங்கள். இதனால் நல்ல உறக்கம் வருவதுடன் குறட்டை பிரச்சனையும் நீங்கும். இது தவிர, கேஸ், அசிடிட்டி, மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏலக்காய் மூலம் போக்கலாம்.

ஏலக்காயின் அற்புதமான நன்மைகள்

* ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது.

* மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு.

* பருவநிலை மாற்றத்தின்போது உண்டாகும் சளி, இருமல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக இருக்கிறது.

* மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் உதவுகிறது. அதோடு நோய் எதிர்ப்பு அழற்ச்சி, பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்பு, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் எந்த ஆரோக்கிய பாதிப்புகள் நேர்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.

* உடல் பருமன் , உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் கைக்கொடுக்கிறது.

* ஏலக்காய் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதிலுள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

* இயற்கையாகவே ஏலக்காய் புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வின் படி ஏலக்காய் புற்று நோய் வராமல் தடுக்கவும், தள்ளிப் போடவும், புற்று நோய் உருவாகாமல் தடுக்கவும் செய்கிறது.