×

ஏலக்காயை ஏளனமா பார்க்காதிங்க ,அதன் ஏராளமான நன்மைகள் தெரிஞ்சா தாராளமா சாப்பிடுவீங்க ,

 

ஏலக்காய் வாசனை பொருளாக பார்க்கப்படும் நிலையில், அதில் பல இயற்கை நன்மைகள் உள்ளன.  நன்மைகளை பற்றி இங்கு காண்போம்...

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.
வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

ஏலக்காய் அதிக விலைமதிப்பு கொண்ட மசாலா பொருளாக விளங்குகிறது.

அதன் சுவை, மணம் உள்ளிட்ட பண்புகளால், பானங்கள் முதல் இனிப்பு வகைகள் வரை தயாரிக்க ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.

ஏலக்காயில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. பழங்காலம் தொட்டு இது சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் போது இன்னும் பல நன்மைகளை தருகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஏலக்காய் விதைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலமாக மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.

ஏலக்காய் சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது, இது இரத்த நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கிறது.

நன்றாக விருந்து சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்ட பிறகு வாயில் ஒரு ஏலக்காயை போட்டு மென்று சாப்பிட்டால், அவை வலுவான பூண்டு அல்லது வெங்காய வாசனையை கூட அகற்ற உதவுகின்றன. ஏனென்றால் ஏலாக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தை அகற்ற உதவுகின்றன.

மனச்சோர்வாக இருக்கும் போது ஏலக்காய் கலந்த ஒரு கோப்பை தேநீர் உங்களுடைய மனநிலையையே முற்றிலும் மாற்றுவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். அதன் சுவை மற்றும் வாசனை உணர்வுகளை தளர்த்த உதவுகிறது.

வயிற்று பகுதியில் உள்ள அதிக கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் தண்ணீரைத் தக்கவைப்பது போன்ற விஷயங்களுக்கு உதவுவதால், ஏலக்காய் ஒரு முக்கிய எடை இழப்பு மசாலா பொருளாக விளங்குகிறது.

 உணவில் ஏலக்காயை பயன்படுத்துவது எப்படி?

கொதிக்கும் நீரில் சில திறந்த ஏலக்காய்களை சேர்க்கலாம்.

உணவுக்கு பிறகு வாய் புத்துணர்ச்சியாக்க ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடலாம்.

நிம்மதியான இரவு உறக்கத்திற்கு, படுக்கைக்கு செல்லும் முன்பு பாலில் ஒரு சிட்டிகை ஏலக்காயை மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து அருந்தலாம்.

கறிகள் மற்றும் ஹல்வா மற்றும் கீர் போன்ற இனிப்பு வகைகளில் சேர்க்கலாம்.