×

நீங்கள் செய்யும் நாலு தவறுகளால் மாதம் நாலு கிலோ எடை கூடும்

 

உடல் எடை குறைப்பதுதான் இன்று பலரின் தலையாய பிரச்சினை .இதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்வோரும் உண்டு .ஆனால் எடை குறைக்க சிலர் டயட்டை சரியாக பின் பற்றாமல் எடை குறையவில்லையே என்று புலம்புவது உண்டு .முதலில் எடை குறைக்க நினைப்போர் சாப்பிடுவது சப்பாத்தியாக இருந்தாலும் ,இல்லை சாதமாக இருந்தாலும் சரி அதனுடன் இருபங்கு காய்கறிகள் எடுத்து கொள்ள வேண்டும் .சிலர் வெயிட் குறைக்க காலை எழுந்ததும் ஆப்பிள் சைடர் வினிகர் சாப்பிடுவது உண்டு .ஆனால் இது அமிலத்தன்மையை அதிகரிக்கும் என்பதால் இதை தவிர்க்கலாம் சிலர் காபி டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவர் .இது தவறு என்று நியூட்ரிஷியன்கள் கூறுகின்றனர்

1.கலோரிகள் குறித்த புரிதல்

 உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், தாங்கள் உண்ணும் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன; அந்த உணவு ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.  இதன் மூலம் அதிக கலோரிகளை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்

2. சரியான அளவு புரதத்தை உட்கொள்வது மிகவும் முக்கியம்

. எடை இழப்புக்கு முயற்சி செய்கையில், சிலர் சரியான அளவு புரத சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் அவர்கள் முயற்சி வீணாகி விடும். ஏனெனில் புரதம் பசியை குறைக்க உதவுகிறது. எடை இழப்பின் போது, தசைகளையும் தளராமல் பாதுகாக்கிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுவது அவசியம்.

3. உடற்பயிற்சி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

 புதிதாக ஒருவர் உடற்பயிற்சி செய்யத் தொடங்குகிறார் என்றால், முதலில் எளிதான பயிற்சிகளை செய்து, பின்ன மெதுமெதுவாக நேரத்தையும், பயிற்சியையும் அதிகரிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில், தேவைக்கு அதிகமாக செய்யக் கூடாது என்பதில், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

4.தினசரி பழக்க வழக்கத்தின் மீது கவனம்

பகலில் வெகுநேரம் வரை தூங்கினால், அது உங்கள் எடை குறைப்பு முயற்சிகள் வீணாக வழிவகுக்கும். எனவே தூங்கி எழும் நேரத்தை முடிவு செய்யுங்கள். தினசரி வேலைகளை திட்டமிடுவதன் மூலம் தினசரி அட்டவணையை தயார் செய்யலாம். இதைத் தொடர்ந்து பின்பற்றி வருவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.