உடல் எடையை குறைக்க வாரத்தில் ஒரு நாள் எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சிக்கோங்க..
பொதுவாக உணவு உண்ணும் போது வேறு எந்த நடவடிக்கையும் செய்யக்கூடாது. ஒரு சில மக்கள் சாப்பிடும் போது டிவி பார்த்து அல்லது எதையாவது வாசித்து கொண்டே சாப்பிடுவார்கள், இது ஒரு மோசமான பழக்கம். உடல் எடையை குறைக்க உணவு உண்ணும் போது பேசக்கூடாது. மற்ற நடவடிக்கைகள் பற்றி நினைக்க கூடாது.மேலும் உடல் எடையை குறைக்க உதவும் உணவு முறை பற்றி இந்த பதிவில் நாம் பாக்கலாம்
1.உடல் எடையை குறைக்க உண்ணாவிரதம் எளிய மற்றும் சிறந்த முறை ஆகும்.
2.உடல் எடையை குறைக்க வாரத்தில் ஒரு நாள் பழங்கள் மற்றும் காய்கறி தவிர வேறு எந்த உணவையும் சாப்பிட வேண்டாம்.
3.உடல் எடையை குறைக்க நீச்சல் உதவும் .இதன் மூலம் நீங்கள் நிறைய கலோரிகளை எளிதாக எரிக்கலாம். அதுவும் ஜாலியாக இருக்கும்.
4.தொடர்ந்து .1 மணிநேரம் நீந்துவது 720 கலோரிகளை விட அதிகமாக எரிக்க முடியும்.
5.நீச்சல் இயற்கையாகவே எடை குறைப்பதற்கான எளிமையான மற்றும் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.
6.நீங்கள் இந்த எளிமையான தீர்வுக்கு கடினமாக உழைக்க வேண்டும்.
7. குறைந்தபட்சம் சந்தைக்கு அருகில் உள்ள பூங்காவையோ அல்லது வேறு சில இடங்களுக்கு செல்வதற்கு வாகனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தினால் உடல் எடையை குறைக்கலாம்
8.உடல் எடையை குறைக்க உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இது உடலில் கொழுப்பு உருவாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
9.உடல் எடையை குறைக்க நாம் சாப்பிடும் உணவு நன்றாக மென்று சாப்பிட வேண்டும், இதனால் நம் செரிமான அமைப்பு அதை ஜீரணிக்க எளிதானது.
10.உங்கள் மூச்சு உங்கள் எடை இழப்புக்கு நேரடியாக சம்மந்தம் உள்ளது. நன்றாக சுவாசிக்க பழகினால், அதிக எடை குறைக்கலாம். இதற்காக நீங்கள் 30 நிமிடங்கள் ஓடலாம், 20 நிமிடங்கள் நீந்தலாம். பொதுவாக 5 முதல் 10 நிமிடங்களுக்கு மூச்சு பயிற்சி செய்யுங்கள்.
11.கருப்பு மிளகு உங்கள் உடல் கொழுப்பு செல்களை உடைத்து எடை இழப்புக்கு உதவும். நீங்கள் சமைத்த உணவுகளில் கருப்பு மிளகு சேர்க்கவும்.