×

தினமும் தண்ணீரைக் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் எந்த நோயெல்லாம் வராது தெரியுமா ?

 

பொதுவாக கோடை காலத்தில் நம் உடலுக்கு நாம் குடிக்கும் தண்ணீர் பற்றாது .இதனால் பல்வேறு உஷ்னம் சம்பந்தமான நோய்கள் நம்மை நோக்கி வரும் .அதனால் மற்ற நாட்களில் குடிப்பதை விட கோடைகாலத்தில் அதிகமாக நீர் அருந்த வேண்டும் ,இப்படி வெறும் வயிற்றில் நீர் அருந்தினால் என்ன நன்மை நமக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம் 
1.சிலருக்கு பசியே எடுக்காது அவர்கள் வெறும்  வயிற்றில் தண்ணீர் குடித்தால் விரைவில் பசி எடுக்க  ஆரம்பித்துவிடும். 
2.சிலர் எப்போதும் சோர்வாக இருப்பர் .அவர்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,  உடலானது சோர்வாகாமல் அதிக புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3.சிலருக்கு உடலில் நீர் சத்து குறைவாய் இருக்கும் .இப்படி உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர்  குடித்து வரலாம் . 
4.இதனால் உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும். 
5.இப்படி வெறும் வயிற்றில் நீர் அருந்தினால்  அல்சர் போன்ற வயிற்று பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம். 
6.மேலும் சிலர் எடை குறைய விரும்புவர் ,இப்படி உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வரலாம் , . 
7.இப்படி வெறும் வயிற்றில் நீர் அருந்தினால் உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  
8.தினமும் தண்ணீரைக் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. 9.பொதுவாக  குடலானது சுத்தமாக இல்லாவிட்டால் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும்.அதனால் இப்படி வெறும் வயிற்றில் நீர் அருந்தி வரலாம்  
10.குடல் சுத்தம் இல்லையென்றால் முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். அவர்களும்  வெறும் வயிற்றில் நீர் அருந்தி வரலாம்