×

வெறும் காலில் நடப்பதால் உடல் பெறும் நன்மைகள்

 

பொதுவாக இன்றைய நாகரீக உலகில் பலர் வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிந்து கொண்டு நடக்கின்றனர் .ஆனால் இது நமக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொடர்பை துண்டிக்கிறது .அதனால் சில மணி நேரமாவது வெறும் காலுடன் நாம் நடக்க வேண்டும் .இப்படி வெறும் காலுடன் நடப்பதால் நம் உடல் பெரும் நன்மைகள் என்ன என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்

1.சிலர் எந்நேரமும் செருப்பு போட்டுகொண்டு நடப்பர் .அப்படியில்லாமல் வெறும் காலில் சிறிது நேரமாவது நாம் நடக்க வேண்டும் .இதனால்  இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்

2.மேலும் கரடு முரடான தரையில் வெறும் காலுடன் நாம் நடக்கும் பொழுது நம்முடைய பாதத்தின் கீழ்ப்பாகத்தில் நேரடியாக அழுத்தம் ஏற்பட்டு ,நம் செயல்பாட்டை மேம்படுத்தும் .

3.நாம் வெறும் காலுடன் பல இடங்களில் நடக்கும் பொழுது அது அக்குபஞ்சர் சிகிச்சையினால் கிடைக்கும் முழு பலனையும் கொடுக்கிறது.

4.வெறும் காலுடன் நடப்பதால்  நம்முடைய இரத்த மண்டலம் சீராகிறது

5.வெறும் காலுடன் நடப்பதால் நரம்பு மண்டலங்களில் உள்ள சோர்வான செல்கள் அழிக்கப்பட்டு புது செல்கள் தோன்றி புத்துணர்ச்சி உண்டாகிறது

6.அது போல் வெளியில் பார்க்கில் நடைப்பயிற்சி செல்லும் பொழுது வெறும் காலுடன் செல்ல வேண்டும்.

6.மேலும் ஆரோக்கியமாய் இருக்க ஒரு நாளில் சிறிது நேரமாவது வெறும் காலுடன் நடக்க வேண்டும்.

7.வெறும் காலுடன்  கல்,மண்,புல் போன்றவரை மிதித்து செல்லும் பொழுது இயற்கையிலேயே நமக்கு அக்குபஞ்சர் சிகிச்சை இலவசமாகவே கிடைக்கிறது.