தைராய்டு குறைவாக சுரக்கும்போது என்ன அறிகுறியிருக்கும் தெரியுமா ?
பொதுவாக இன்றைக்கு அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்னைகளில், தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு உருவெடுத்துள்ளது
இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்த தைராய்டால் நம் உடலில் நேரும் மாற்றம் பற்றியும் ,அதற்கான இயற்கை சிகிச்சை முறை பற்றியும் இந்த பதிவில் நாம் காணலாம்
.
1.ஒருவரின் உடலில் தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை குறையும்.
2.ஒருவரின் உடலில் தைராய்டு சுரப்பு அதிகமானால் செயல்பாடுகள் மந்தமாகும்.
3.ஒருவரின் உடலில் தைராய்டு சுரப்பு அதிகமானால் சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும்.
4.அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது, திடீரென உடல் எடை அதிகரிக்கும். ஒருவிதமான எரிச்சல், பதற்றம், இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படுவது இதன் முக்கியமான அறிகுறிகளாகும்.
5.நம் உடலின் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்வதற்கு அயோடின் சத்து அவசியமாகிறது. தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்.
6.தயிரிலிருந்து தயாரிக்கப்படும் யோகர்ட் (குறைந்த கொழுப்புள்ள தயிர்) அதிக அயோடின் சத்துள்ள உணவாகும். எனவே, தினசரி உணவில் யோகர்ட் சேர்த்துக்கொள்ளலாம்.
7.பொதுவாக ஒரு முட்டையில் 16% அயோடினும், 20% செல்லினியமும் உள்ளது.
8.எனவே இந்த உணவு தேவையான அயோடின் சத்து கிடைக்கச் செய்கிறது. மேலும், முட்டை தைராய்டு சுரப்பிக்கும் மிகவும் தேவையான ஒன்று.
9.தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் வைட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
10.இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்க உதவும்.