பல் பிரச்சினை வராமலிருக்க நாம் என்ன செய்யணும் தெரியுமா ?
பொதுவாக நமக்கு இருக்கும் சில பழக்க வழக்கங்களால்தான் நம் உடல் நலம் பாதிப்படைகிறது .அது என்ன பழக்கம் ,அதை எப்படி கைவிட்டு ஆரோக்கியமாக நீண்ட நாள் நோயின்றி வாழலாம் என்று இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்
1.சிலர் புகை பிடிப்பர் .அவர்கள் புகைப்பிடிக்கும் போது அது இரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனின் அளவை குறைத்து கார்பன்டை ஆக்சைட்டின் அளவை அதிகரிக்கிறது.
2.புகைப்பிடிக்கும் போது உடலிலுள்ள திசுக்களுக்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காது.
3. பலர் தொடர்ச்சியாக குடிபோதையில் இருப்பர் .இப்படி இருப்பதினால் அவர்களுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீர்ப் பாதிப்பு ஏற்படும் .
4.அதுமட்டுமன்றி குடி பழக்கத்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவடையும். இப்பிரச்சனைகளை குறைக்க வேண்டுமெனில் இப்பழக்கங்களை கைவிட வேண்டும்.
5.பல் பிரச்சினை வராமலிருக்க நாம் காலை, மாலை என இரண்டு வேளைகளும் பல் துவக்குவது முக்கியமானதாகும்.
6. பலர் ஒருவேளைதான் பல் துலக்குவர் .இப்படி ஒருவேளை மட்டும் பல்துலக்குவதால் 90 சதவீத கிருமிகளை மட்டுமே அகற்ற முடியும்.
7.எனவே இரவு தூங்குவதற்கு முன்நம் பல்லை பாதுகாக்க பல் துலக்க வேண்டியது மிகமிக முக்கியமானதாகும்.
8.இருவேளை பல் துலக்காமல் விட்டால் சொத்தைப் பிரச்சினை, வாய் துர்நாற்றம், போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும்.
9.அடுத்து சிலர் அவசரம் அவசரமாக சாப்பிடுவர் .ஆனால் உணவு உண்ணும் போது நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
10.உணவை மெல்லாது சாப்பிடும் போது செரிமானம் அடைய தாமதமாகும்.
11.அதுமட்டுமில்லாது சாப்பிடும் உணவானது உணவுக் குழாய்க்கு பதிலாக மூச்சுக்குழாய்க்குள் உணவு சிக்குவதற்கும் வாய்ப்புள்ளது.