பல்வலியை பத்து நிமிஷத்தில் விரட்டும் முத்தான வைத்திய முறைகள்
பல்வலி வந்தால் போதும் தாங்க முடியாத வலி எடுக்கும். நாமும் எவ்வளவு முயற்சி செய்தும் பல்வலி என்பது குறைந்த பாடாக இருக்காது. இதனால் நம் அன்றாட வேலைகளைக் கூட நம்மால் சரியாக செய்ய இயலாது. இதற்கு அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளையும் எடுத்து வர முடியாது. ஏனென்றால் அதிகப்படியான மாத்திரைகளால் நமக்கு பக்க விளைவுகள் உண்டாக வாய்ப்புள்ளது.
பல்வலி பெரும்பாலும், வாய், தாடை, முகம் ஆகியவற்றில் உணரப்படும் எந்தவொரு வலியையும் உள்ளடக்கிய ஒரு பொது சொல்லான "ஓரோஃபேசில் வலி" (Orofacial pain) என்பதாகும்.ஏனெனில் தூக்கம், உணவு மற்றும் பிற தினசரி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம்,
, சொத்தை அடைந்த பல்லை அகற்றாது நோய்த்தொற்றை நீக்கவும் வருங்காலத்தில் நுண்ணுயிரித் தொற்றுக்களிலிருந்து பல்லைக் காப்பாற்றவும் பற்கூழில் மேற்கொள்ளப்படும் சிகிட்சையான பல்லுட்புற சிகிட்சை, பற்தாங்கிகளில் அல்லது பற்சிற்றறைகளில் (Sockets) இருந்து பல்லை பிரித்து எடுத்தலைக் குறிக்கூடிய பிரித்தெடுத்தல், மற்றும் சீழ் வடிகால், போன்ற மற்ற கடுமையான நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
பொதுவாக, மிகவும் குறைவாகவே பல் சம்பந்தம் அல்லாத பல்வலி ஏற்படுத்தும், சைனஸ் தொற்றுநோய் அல்லது நாசிப்புரையழற்சி எனும் புரையழற்சி போன்றவை, மேல் பற்களில் வலி ஏற்படுத்தலாம், அல்லது நெஞ்சின் நடுப்பகுதியில், மார்பு எலும்பின் பிற்பகுதியில் அழுத்துவது அல்லது பிசைவது போன்ற உணர்வுடன் ஏற்படக்கூடிய மார்பு நெரிப்பு, போன்ற காரணிகளாலும் கீழ் பற்களில் வலி ஏற்படலாம்.
தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒரு எண்ணெயை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனை வாயினுள் வைத்து பற்களை சுற்றி நன்றாக கொப்பளித்து துப்ப வேண்டும். இவ்வாறு வாயினுள் எண்ணெயை வைத்துக் கொண்டு 10 அல்லது 20 நிமிடங்கள் கொப்பளித்து பின்னர் வெதுவெதுப்பான சுடுநீரில் வாயினை சுத்தம் செய்ய வேண்டும். தினமும் இவ்வாறு காலையில் எழுந்தவுடனும், இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாகவும் செய்து வர வேண்டும்.
நெல்லிக்காய் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு அந்த நீரினால் தினமும் ஒரு முறை வாய் கொப்பளிக்க வேண்டும். வாய் கொப்பளித்த பிறகு ஒரு மணி நேரத்திற்கு எந்த வித உணவுகளையும் சாப்பிடக் கூடாது. இவ்வாறு செய்து வருவதால் பற்களில் இணைப்பு திசுக்கள் உருவாவாகும். ஈறுகள் மற்றும் பற்கள் வலு பெரும். இரண்டு பல் பூண்டினை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அவற்றை சேதமடைந்த பல் அல்லது தளர்வாக இருக்கும் பல்லிர்க்கும் கன்னத்திற்கும் இடையில் வைத்துவிட வேண்டும். முடிந்தவரை 1 நேரம் இதனை வைத்திருந்து பின்னர் எடுத்துவிடலாம். இவ்வாறு செய்து வந்தால் பல் பிரச்சனைக்கு காரணமாக தொற்றுக்களை அழித்து பற்களை வலுவாக்கும்.
கடுகு எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து அதனை பிரச்சனை உள்ள பற்களை மீது தடவி வந்தால் பல் பிரச்சனை அகன்றுவிடும். கடுகு எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து அதனை பேஸ்ட் போல் குழைத்து கொண்டு கூச்சம் உள்ள பற்களின் மீதோ அல்லது ஆட்டம் கொண்டிருக்கும் பல் மீதோ தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து, பின்னர் வாரம் முறை செய்து வந்தால் நல்ல பலன் கொடுக்கும்.