×

குழந்தைகளை தாக்கும் டான்சில் பிரச்சினையை டக்குனு சரி செய்யும் முறைகள்

 

டான்சில் என்பது சிறுநீரகக் கற்கள் போல தொண்டையில் ஏற்படும் நுண்ணிய கற்கள் போலத்தான். நம்முடைய வாயிலிருந்து நச்சுக்கள் எதுவும் வெளியேறாமல் தொண்டைக்குள்ளேயே இருப்பதால் ஏற்படும் விளைவு. இந்த நச்சுக்கள் நுண்ணிய கால்சியம் மூலக்கூறுகளாக அப்படியே தேங்கிவிடுகிறது.நம்மில் பலருக்கு அடிக்கடி தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டையில் எரிச்சல், தொண்டையில் கரகரப்பு, அதிக உமிழ்நீர் வடிதல், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போன்ற அறிகுறிகள் வருடத்தில் பல தடவைகள் வந்து போவதுண்டு. பலர் இத்தகைய அறிகுறிகளை அலட்சியம் செய்துவிட்டு அவ்வப்போது கிடைக்கின்ற தற்காலிக நிவாரணிகளை உட்கொண்டு அறிகுறிகளை மறக்கடித்து வருகின்றனர்.

இத்தகைய நடவடிக்கையால் இந்த நோயின் அடிப்படை காரணமான பி-ஹீமாலிடிக் ஸ்டெப்டோ காக்கை என்னும் ஒருவித நச்சுக்கிருமி ரத்தத்தில் வீரியமடைந்து, நாளடைவில் அதன் நச்சுத்தன்மை கால், மூட்டுகள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் நிரந்தர பாதிப்புக்கு உட்படுத்தி விடும் என்பது நம்மில் பலருக்கு தெரியாத விஷயம்.

உப்பு நீர் டான்சில் கற்களுக்கு மற்றொரு எளிய தீர்வு உப்பு. தினசரி நமது உணவில் ஒரு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் உப்பு, கிருமிகளுடன் போராடி, டான்சில் கற்களைத் தடுத்து, வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து வாயில் ஊற்றி நன்றாகக் கொப்பளிக்கவும். இந்த முறையை ஒரு நாளில் பல தடவை பின்பற்றவும். இந்த டான்சில் அழற்சி கரைவதற்கு கடினமாக இருந்தாலும், உப்பு இதனை எளிதில் செய்து விடுகிறது.

ஆயில் புல்லிங் ஆரோக்கியமான வாய் வழி சுகாதாரத்திற்கான ஒரு அற்புதமான தீர்வு ஆயில் புல்லிங். இது மிகவும் எளிமையானது. பல காலமாக, ஆயுர்வேத சிகிச்சைகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையைப் பின்பற்றுவதால் கிருமிகள் அழிக்கப்படுகிறது, பற்களில் உள்ள நச்சுகள் வெளியாகிறது, டான்சில் கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது. ஆயில் புல்லிங் செய்ய பெரும்பாலும் நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் பல் துலக்குவதற்கு முன்னர் ஆயில் புல்லிங் செய்யலாம். ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் எடுத்து வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். மிக எளிதான முறையில் வாயில் கிருமிகள் வராமல் தடுக்க ஆயில் பபுல்லிங் ஒரு சிறப்பான தீர்வாகும்.

நீர்ச்சத்துடன் இருப்பது மனித உடல் 90% தண்ணீரால் ஆனது. நம்மில் பலர், உடல் செயல்பாட்டுக்கு தேவையான போதுமான அளவு தண்ணீர் பருகுவதில்லை. மேலும், வாயில் உண்டாகும் கிருமிகள் வளர்ச்சியைத் தடுப்பதில் உமிழ்நீர் சுரப்பு மிகவும் அவசியம் என்பதை பலரும் அறிந்திருக்கலாம். உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும்போது, உங்கள் வாய் குறைந்த உமிழ்நீரை சுரக்கிறது. இதனால் கிருமி தொற்று பாதிப்பு அதிகரித்து, டான்சில் கற்கள் உருவாகிறது. ஆகவே தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகி நீர்ச்சத்துடன் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இருமல் மூலமாக டான்சில் கற்களை வெளியேற்றுவது நீங்கள் நினைக்கும் அளவிற்கு எளிதான காரியம் அல்ல. ஆனால் இது ஒரு சிறப்பான முறையாகும். டான்சில் கற்களை வாயில் இருந்து வெளியேற்ற இருமல் ஒரு சிறப்பான தீர்வாகும். இருமுவதால் கற்கள் வெளியேறியவுடன், உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால், மீண்டு பக்டீரியா வாயிற்குள் புகாமல் தடுக்க முடியும்.