×

சூடான உப்பை நம் உடலில் ஒத்தடம் கொடுத்தால் என்னாகும் தெரியுமா ?

 

பொதுவாக உடல் வலி முதல் மூட்டு வலி வரை நம் உடலில் உண்டாக பல்வேறு காரணங்கள் உள்ளது .இது சிலருக்கு வாயு பிரச்சினையால் உண்டாகிறது .சிலருக்கு அதிக உடற்பயிற்சி செய்வதிலோ அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிவதிலோ இன்னும் சிலருக்கு எந்த காரணமும் இன்றி உடல் வலி உண்டாகலாம் . சிலருக்கு கீல் வாதம் ,முடக்கு வாதம் ,பழைய காயங்கள் ,தைராய்டு நோய் போன்ற காரணிகளால் இந்த வலிகள் தோன்றும் .இதற்கு இயற்கையாக குணப்படுத்த பின்வரும் வழிகள் உள்ளது .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.உடலில் ஆங்காங்கே தோன்றும் வலிகள் அதாவது கை, கால் வலி, முதுகு வலி, கழுத்து வலி போன்றவற்றுக்கு பல வைத்திய முறைகள் இருந்தாலும் ,இயற்கையாக குணமாக்க உப்பு ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

2.இந்த உடல் வலிக்கு முதலில்  அடுப்பில் ஒரு கடாய் வைத்து நல்ல சூடான பிறகு அதில் கல் உப்பு சேர்த்து கல்லுப்பை  சூடாக்க வேண்டும்.

3.பிறகு அதை வறுத்த பிறகு அந்த உப்பை ஒரு துணியில் கொட்டி மூட்டை கட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

4.பின்னர் அந்த வலியுள்ள  இடத்தில் அந்த உப்பு மூட்டையை வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

5.ஆனால் ஒத்தடம் கொடுக்கும் போது உப்பு ஆனது நம் உடல் பொறுக்கும் அளவிற்கு நல்ல சூட்டுடன் இருக்க வேண்டும். இது தசை வலியை கூட குணமாக்கும் ஆற்றல் கொண்டது ,எனவே செலவில்லாத இந்த சிகிச்சை முறையினை உங்கள் வீட்டிலேயே நீங்கள் மேற்கொண்டு பயன் அடையலாம்