×

உடலில் கொலஸ்ட்ரால் அளவு கூடாமல் நம் உடலை பாதுகாக்கும் வழிகள்

 

பொதுவாக நமக்கு இதய நோய் வருவதற்கு கொலஸ்ட்ரால் முக்கிய காரணமாய் அமைகிறது அதனால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கூடாமல் நம் உடலை பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும் .உதாரணமாக 
பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்..மேலும் கொலஸ்ட்ராலை குறைக்கும் வழிகள் பற்றி பாக்கலாம் 

1.மிளகாய்  உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை.
2.பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் கொலஸ்ட்ராலை குறைக்கும் . 
3.பீன்ஸை அப்படியே உண்டால் , பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.
4.ரெட் ஒயினை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். 
5.அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று பல மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
6.அடுத்து வெண்டைக்காய் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. 
7.அதிலும் வெண்டைக்காயில்  மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். 
8.அது மட்டுமல்லாமல்  நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
9.பூண்டில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். 
10.அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் பலமடங்கு அதிகரிக்கும் .