×

பரு பிரச்சினையை தடுக்க என்ன செய்யணும் தெரியுமா ?

 

பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் பருக்கள் வரும் .இந்த பருக்கள் எந்த இடத்தில் வந்தால் என்ன பிரச்சினை என்றும் ,இதை எப்படி தவிர்க்கலாம் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம் 

1.ஒருவருக்கு நெற்றிப் பகுதியில் முகப்பரு வந்தால், அவரது செரிமான மண்டலத்தில் பிரச்சனை வரும். 
2.இந்த செரிமான பிரச்சனை சரியாவதற்கு அவர் நீர் அதிகம் அருந்தினால் இந்த பிரச்சினை சரியாகும் 
3.இந்த செரிமான பிரச்சனை சரியாவதற்கு முடிந்தளவு 7 மணிநேரமாவது தூங்க வேண்டும். 
4.சிலர் அழுக்கு நிறைந்த தலையணை உறைகள் மற்றும் படுக்கை விரிப்புக்களைப் பயன்படுத்துவர் .இப்படி பயன்படுதினால் கன்னப்பகுதியில் முகப்பருக்கள் வரும். 
5.இந்த கண்ண பருவை தடுக்க  அடிக்கடி தலையணை உறைகளை மாற்ற வேண்டும். 
6.அது மட்டுமல்லாமல்  முகத்தை அடிக்கடி கழுவிக் கொள்ள வேண்டும்.  
7.மேலும் சிலருக்கு மூக்கு பகுதியில் முகப்பருக்கள் வரும் .இப்படி வந்தால், அது குடல் சமநிலையின்மை அல்லது உணவு அழற்சிகளால் ஏற்படும். 
8.எனவே மூக்கு மற்றும் தாடையைச் சுற்றி பருக்கள் வந்தால், கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனையில் கொண்டு போய் விடும் .
9.மேலும் சிலருக்கு தாடை மற்றும் கழுத்து பகுதியில் முகப்பருக்கள் வரும் .இப்படி வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை உடலில் உள்ளது என அர்த்தம் . .
10.மேலும் சிலருக்கு முதுகு, கைகள் மற்றும் தொடை பகுதியில் முகப்பருக்கள் வரும் .இப்படி வந்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக அர்த்தம். 
11.இந்த பரு பிரச்சினையை தடுக்க சுத்தமான ஆடைகளை அணிவது, முதுகுப் பகுதியில் அதிக அழுத்தத்தைக் கொடுப்பதைத் தவிர்ப்பது, சன் ஸ்க்ரீன், பாடி லோசன் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் இதை தடுக்கலாம்.