×

பெண்களே !மாதவிடாய் தள்ளி போக இத்தனை  காரணங்கள் இருக்கு

 

இன்றைக்கு மாறிவிட்ட வாழக்கை முறை மற்றும் உணவு முறையால் பல பெண்களுக்கு மாத விடாய் ஒழுங்கற்று வருகிறது .இதற்கு என்ன காரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

பல பெண்களுக்கு ஹார்மோன்களின் சமச்சீரின்மை அரிதாகவே ஏற்படும் ஒரு காரணமாகும். குறிப்பாக பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் ஓர் ஹார்மோன் சமச்சீரின்மை நோய்க் கூறாகும். ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும் போது, பி.சி.ஓ.எஸ் ஏற்படும். இது கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.பெண்களின் அதிகரித்த உடல் எடை இப்படி மாத விடாய் தள்ளி போக ஒரு காரணம் ஆகும் .பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் இப்படி மாத விடாய் தள்ளி போக காரனம்

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் மாதவிடாய் தள்ளிப் போகலாம்

பெரும்பாலும் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். மாதவிடாய் சுழற்சி முடியப்போகும் சில மாதங்களுக்கு முன்னர் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட்டு அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் படுத்தி எடுக்கும்

சில பெண்களுக்கு இருக்கும் தைராயிட் பிரச்சினைஅவர்களின் மாதவிடாய் தள்ளி போக ஒரு காரணம் ஆகும்

சில பெண்களின் அதிகரித்த உடற்பயிற்சியாலும் அவர்களின் மாதவிடாய் தள்ளி போகலாம்