இஞ்சி நீரை பருகி வாழ்ந்தால் எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?
பொதுவாக இன்றைய பெண்கள் பலருக்கும் மாதவிடாய் தொல்லை இருக்கிறது ,இதற்கு மாறிவிட்ட வாழ்வியல் முறையும் உணவு முறையும் காரணம் .இந்த பிரச்சினைகளுக்கு பல பெண்கள் மாத்திரைகள், ஊசிகள் மூலம் தீர்வு பெறவே முயற்சிக்கின்றனர். இது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
எனவே இயற்கை தயாரிப்புகள் மூலம் எப்படி தீர்வு காணலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.மாத விடாய் பிரச்சனைகள் உள்ளவர்கள் பப்பாளி சாப்பிட்டால் மாதவிடாய் முறையாக வரும்.
2.பப்பாளியில் உள்ள கரோட்டின், ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனைத் தூண்டுகிறது . இது முன்கூட்டியே மாத விடாய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது .
3.மாத விடாய் பிரச்சனைகளைதீர்க்க தினமும் இரண்டு முறை பப்பாளியை பச்சையாகவோ அல்லது சாறு பிழிந்தோ உட்கொள்ளலாம்.
4.மாத விடாய் பிரச்சனைகளை தீர்க்க இஞ்சியின் பங்கு அளப்பெரியதாகும்.
5.மாதவிடாய் கோளாறை சரி செய்ய தினமும் மூன்று முறை சிறிதளவு இஞ்சியை எடுத்து தண்ணீரில் 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள் .
6.பின்னர் அந்த இஞ்சி நீரை பருகி வாழ்ந்தால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.
7.மேலும் இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூலப் பொருள் மாதவிடாய் வலியை குணப்படுத்தக் கூடியது.
8அடுத்து எள்ளு .உடலின் இரத்தப் போக்கை சீராக வைத்து ஹார்மோன்களை நன்கு சுரக்க செய்கிறது.
9.எள்ளில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன்கள் உற்பத்திக்கும் நன்றாக உதவுகிறது
10.எள் மூலம் நாள்பட்ட மாதவிடாய் பிரச்சினை விரைவில் குணமடையும்.