பப்பாளி பழத்தை முகத்தில் தடவி வந்தால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக பழ வகைகள் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்க கூடியது .அந்த வகையில் பப்பாளி பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு .உதாரணமாக
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வலிகள்,உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. மற்றும் ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும் நிலையில் பப்பாளி இந்த பிரச்னையை குணப்படுத்துகிறது.மேலும் இந்த பழம் மூலம் நாம் அடையும் பலன்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்
1.பொதுவாக பப்பாளி பழத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும் தன்மை ஏராளமாய் உள்ளது.
2.பப்பாளி பழம் ரத்ததில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரித்து, நோய் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்தி நம் ஆரோக்கியம் காக்கிறது
3.மேலும் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன.
4.. பொதுவாக பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.
5. தினமும் காலை மாலை என இருவேளையும் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகி ஆரோக்கியம் பிறக்கும் .
6.. மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, மூலநோயால் ஏற்படும் வயிறு பிரச்சனைகள் பப்பாளி பழம் மூலம் குணமாகிவிடும்.
7.. முகெலும்பு நழுவல் காரணமாக வரும் கடுமயான வலிக்கு பப்பாளியில் உள்ள ‘கமோ பாப்பன்’ என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.
8.பொதுவாகவே பப்பாளி தலைமுடி, சருமம், கண்பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம் அனைத்துக்கும் மிகவும் ஏற்றது.
9.பப்பாளி பழத்தை முகத்தில் தடவி வந்தால் கண் கருமை, முகத்தில் சுருக்கம், நீங்கி முகத்தில் பளபளப்பு மற்றும் அழகு கூடும்.
10.பப்பாளிபழம் ரத்ததில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, அவர்களின் உடல் சோர்வை குறைகிறது.