×

மூக்கடைப்பு உடனே சீராகி, மூச்சு திணறல் குறைய என்ன செய்யணும் தெரியுமா ?

 

நீராவி பிடிப்பதன் மூலம், தலை மற்றும் மூக்கில் அடைக்கபட்டிருக்கும் நீர் வெளியேறுகிறது . ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். ஒரு போர்வையை நன்றாக போர்த்திக் கொண்டு தண்ணீரில் இருந்து வெளியேறும் ஆவி முகத்தில் படுமாறு குனிந்து கொள்ள வேண்டும். அந்த ஆவியை நன்றாக உள்ளிழுத்து வெளியில் விடவும். தேவைபட்டால், புதினா அல்லது மற்ற எதாவது ஒரு மூலிகையை சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் தீர்வு இரட்டிப்பு ஆரோக்கியத்தை தரும்.

எண்ணெய்யை நுகர்வது :
வீட்டில் பயன்படுத்தும் எண்ணெயுடன் சிறிது மூலிகைகளை சேர்த்து பயன்படுத்துவது மூக்கடைப்பை விலக்கும். தைல எண்ணெய்யின் வாசம் மூக்கடைப்பை தீர்க்க வல்லது. கொதிக்க வைத்த நீரில், சில துளி தைல எண்ணெய்யை தெளிக்கவும். அந்த நீரில், நீராவி பிடிப்பதன் மூலம், மூக்கடைப்பு உடனே சீராகி, மூச்சு திணறல் குறைகிறது. புதினா எண்ணெயையும் இதற்கு மாற்றாக பயன்படுத்தலாம் .

சலைன் நீர் :
வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவும். இப்பொது இந்த திரவத்தை சலைன் திரவம் என்று கூறலாம். இந்த திரவத்தை சில துளிகள் மூக்கிற்குள் விடவும். இதனை செய்வதன் மூலம் , மூக்கில் கட்டியுள்ள சளி மென்மையாகி மூக்கு வழியே வடியத் துவங்கும். மேலும்,  தூசு, சளி போன்றவை விலகி, சீரான சுவாசம் கிடைக்கும்.

பூண்டு:
பூண்டிற்கு பலவித மருத்துவ குணங்கள் உண்டு. குறிப்பாக மூக்கடைப்பிற்கு இது மிக சிறந்த தீர்வாகிறது. மூக்கடைப்பை சரி செய்ய, பூண்டு பற்களை முழுதாக கடித்து விழுங்கலாம். அல்லது சூப் செய்து பருகலாம். பூண்டில் இருக்கும் கிருமிகளை தடுக்கும் தன்மை, தொற்றுகளை நீக்கி, மூக்கடைப்பை சரி செய்கிறது.