×

அளவுக்கதிகமாக பால் குடிப்பதால் உண்டாகும் பக்க விளைவுகள் பத்தி தெரியுமா ?

 

நாம் பிறந்தது முதல் இறப்பது வரை நம்மோடு பயணம் செய்வது பால் .இந்த பாலில் கால்சியம் அதிக அளவு இருப்பதால் இதை குடிக்க பலர் கட்டாயப்படுத்த படுகின்றனர் .ஆனால் இதையும் அளவுக்கதிகமாக குடித்தால் மரணம் கூட ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .

இங்கிலாந்து நாட்டு பிரிட்டிஷ் கவுன்சிலில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகளவு பால் குடிப்பது எலும்பு முறிவு, இதய கோளாறுகள், வயதானவர்களிடையே புற்றுநோய் ஏற்படும் அபாயம் என பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது ஆகவே இதயநோய் இருப்பவர்கள் அதிகம் பால் குடித்தால் அது அவர்களின் உயிருக்கே ஆபத்தில் முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்  

பாலை ஒரேயடியாக குடிக்காமலும் இருக்கக்கூடாது. ஒரு சிலர் சுத்தமாக பாலை தொடவே மாட்டார்கள். அப்படி குடிக்காமல் இருந்தாலும் உடலில் லாக்டோஸ் பற்றாக்குறையும் ஏற்பட்டு எலும்புகள் வீக்காக இருக்கும் .

பால் அதிகமாக குடிக்கும்போது நம் உடம்பில் இந்த பிரச்சனை உருவாகிறது. ஏனெனில், அளவுமிகுந்த லாக்டோஸை உடலானது கிரகிக்க முடியாது. அப்போது உடல் உறுப்புக்களில் வீக்கம், செரிமானப்பிரச்சனை, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். இதனால், வயிற்றில் வாயு பிரச்சனை அதிகமாவதோடு, உடம்பிலுள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அழித்து நம் ஆரோக்கியம் கெட்டு போகிறது