மாதவிடாய் வலிக்கு ஒரு முக்கிய காரணம் என்ன தெரியுமா ?
பொதுவாக மாறிவிட்ட வாழ்க்கை முறைகள் மற்றும் உணவு முறைகளால் இன்று பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர் .ஆனால் நம் முன்னோர்கள் சொன்ன வழி முறைகள் மற்றும் உணவு முறைகளை கடை பிடிக்காமல் விட்டதுதான் இத்தனைக்கும் காரணம் .இந்த பதிவில் வலியில்லாமல் மாதவிடாய் நாட்களை கழிப்பது எப்படி என்று பார்க்கலாம்
1.மாதவிடாய் நாட்களில் காலகட்டத்தில் சரியாக தண்ணீர் குடிக்காதது மாதவிடாய் வலிக்கு ஒரு முக்கிய காரணம்.
2.இந்த நாட்களில் நீங்கள் குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், பிடிப்புகள் உண்டாகும் .இந்த பிரச்சனைகளை தவிர்க்க இந்த நாட்களில் சரியான அளவு தண்ணீர் குடிக்கவும்.
3.நீங்கள் குறைந்த அளவு தண்ணீர் குடிக்கும் போது உங்கள் கருப்பையில் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. 4.இதன் காரணமாக தசைப்பிடிப்பு அதிகரிக்கும்.வலியை குறைக்க பெண்கள் செய்ய வேண்டியது பின் வருமாறு
5.பெண்கள் மாதவிடாய் நாட்களில் தண்ணீர் குடிக்கவும்.
6.இந்த நாட்களில் வெதுவெதுப்பான நீரை குடித்தாலும் நிவாரணம் கிடைக்கும்.
7.உங்கள் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பது உங்கள் உடலின் தன்மை, உடல் செயல்பாடு மற்றும் பருவத்தைப் பொறுத்தது.
8.நிபுணர்களின் கூற்றுப்படி உங்கள் சிறுநீர் தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் அதில் எந்த வாசனையும் இருக்கக்கூடாது.
9.மஞ்சள் மற்றும் துர்நாற்றத்துடன் கூடிய சிறுநீர் நீரிழப்பின் அறிகுறியாகும்.
10.மாதவிடாயின் போது தண்ணீருடன் சேர்த்து சத்தான உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.