×

மாணவர்களின் நினைவாற்றலை அதிகரித்து ,மார்க்கை அதிகரிக்க உதவும் உணவுகள் .

 

சில மாணவர்கள் படிப்பிற்காகவும் ,நினைவாற்றலை அதிகரித்து மதிப்பெண் நிறைய வாங்க சில மெமரி மாத்திரைகள் சாப்பிடும் வழக்கமுண்டு .ஆனால் அவற்றை தொடர்ந்து எடுத்து கொள்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும் .அதனால் இயற்கையான முறையில் உணவு மூலம் ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் வழிகளை காணலாம் 

மீன்

மாணவர்கள் நினைவு திறனுக்கு மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம் .

மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் , அவை நமது மூளை திறமையாக செயல்படத் தேவைப்படுகின்றன. நமது மூளை கொழுப்பு செல்களால் ஆனது, இதற்கு இந்த ஒமேகா உதவி,மூளை  நன்றாக செயல் பட உதவும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்

மஞ்சள் இயற்கை ஆயுர்வேத மசாலா ஆகும், . இது மூளைக்கு  டானிக்காக பயன்பட்டு , மற்றும் மூளை செல் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவி நமது ஞாபக சக்தியை ஊக்கு விக்கிறது .மேலும் இது மனச்சோர்வை நீக்கி மாணவர்கள் சிறப்பாக எக்ஸாம் எழுத உதவும்

அடுத்து வாழைப்பழத்தில்  புரதம், நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது  உங்கள் ஞாபக சக்தியை மேம்படுத்தி , உங்கள் செரிமான சக்தியை ஊக்குவித்து ,தேர்வு நேரத்தில் சிறப்பாகவும் உற்சாகத்துடனும் கலந்து கொள்ள உதவும்

பூசணி விதைகல்  உங்களுக்கு ஆற்றலை ஊக்குவிப்பதோடு உங்கள் மூளையின் ஆற்றலை மேம்படுத்தவும் உதவுகின்றன.இதில் சிறந்த ஆக்சிஜெனேற்ற பண்புகள் நிரைந்துள்ளது