×

ஞாபக மறதிக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா ?

 

பல் வலியும் தலை வலியும் தனக்கு வந்தால் தெரியும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் .அந்தளவுக்கு பல்வலி வந்து விட்டால் நம்மை பாடாய் படுத்தி விடும் .இந்த பல்வலிக்கு ஒரு வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளித்தல் நலம் சேர்க்கும் .மேலும் கிராம்பும் பூண்டும் இடித்து வலியுள்ள இடத்தில வைக்க குணமாகும் .மேலும் கிராம்பு எண்ணெய் வைத்தாலும் பல்வலி பறந்து போகும் .வலியுள்ள இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் வலி போய் விடும் ,மேலும் பல்லை சரியாக பராமரிக்காததால் இந்த பல் வலி வருகிறது .மேலும் பல்லை பராமரிக்க பலவழிகளை கூறியுள்ளோம் படித்து பயன் பெருங்கள் 

1.தினசரி ஒரு முறை மட்டுமே பல் துலக்குவது நினை வாற்றலை பாதித்து மறதி நோயை ஏற்படுத்தும்.என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் 

2.எனவே காலை மாலை இரவு என அன்றாடம் 2 அல்லது 3 முறை வாய் மற்றும் பற்களை சுத்தப்படுத்துவது அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர்

3.சிலருக்கு வாய் துர் நாற்றம் இருக்கும் .உணவு உண்ட பின் நல்ல தண்ணீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம், பல் சொத்தை பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

4.இரவு படுக்க போகும் முன்பு அவசியம் பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள பல் நோய்களை விரட்டலாம்

5. தினமும் ஒரு முறை மட்டுமே பல் துலக்கும் பழக்கம் உள்ளவர் களை மறதி நோய் தாக்கும் சாத்தியம் 65 சதவீதம் அதிகம் உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்

6.உடல் ஆரோக்கியத்துக்கு குளித்தல் மட்டும் போராது ,ஓரல் ஹைஜீன் எனப்படும் வாய் மற்றும் பல் சுத்தம் அவசியம் .