×

கிட்னி கல் வராமல் தடுக்க எவ்வளவு தண்ணீர் குடிக்கணும் தெரியுமா ?

 

பொதுவாக உலகில் எட்டு முதல் பத்து சதவீதம் பேர் கிட்னி பாதிப்பால் அல்லல் படுகின்றனர் .இதற்கு காரணம் கிட்னியில் கல் தோன்றுவது முதல உயர் ரத்த அழுத்தம் மற்றும் நாள் பட்ட சர்க்கரை நோய் போன்றவை காரணமாக அமைகின்றன .எனவே கிட்னியில் கல் உருவாகாமல் எப்படி தடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்  

1.பொதுவாக திரவங்கள் நம் உடலில் அதிகமாக உள்ள தாது உப்புகளை வெளியேற்றும்.அப்போது  போதுமான அளவு நீர் அருந்தாவிட்டால் தாது உப்புகள் சிறுநீரகத்தில் தங்கி, கிட்னியில் கற்கள் உருவாகக்கூடும். 
2.இந்த கிட்னி கல் வராமல் தடுக்க ஒருநாளைக்கு குறைந்தது 2 லிட்டர் அளவு தண்ணீர் போன்ற திரவ பானங்களை அருந்தவேண்டும். 
3.சிலர் சோடியம் உப்பு சாப்பிடுவர் .இந்த சோடியம் அதிகமான உப்பினை உணவில் சேர்த்துக்கொள்வதும் சிறுநீரகக் கல் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும். 
4.; சிறுநீரில் சோடியம் அதிகமாகும்போது, சிறுநீரில் இருக்கும் சுண்ணாம்புச் சத்து மறுபடியும் இரத்தத்திற்குள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. 
5.இதன் காரணமாக சிறுநீரில் சுண்ணாம்பு சத்தின் அளவு அதிகமாகி, சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. 6.கிட்னியில் கல் உருவாகாமல் தடுக்க உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் இவற்றை குறைப்பதுடன் அதிக அளவில் காய்கறிகளை உண்ணுவதும் பயனளிக்கும். 
7.இறைச்சியின் மூலம் , யூரிக் அமில அளவு உடலில் கூடுகிறது. அதிக அளவு யூரிக் அமிலம் கால்சியம் ஆக்ஸலேட் உடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது. 
8.ஆகவே,கிட்னியில் கல் வராமல் தடுக்க  இறைச்சி மற்றும் பால் பொருள்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும். 
9. மேலும் பசலைக்கீரை போன்ற கீரைகளை சாப்பிடுவது சிறுநீரகக் கல் தோன்றும் வாய்ப்பை குறைக்கும்.
10. நாம் சாப்பிடும் உணவில் போதுமான அளவு சுண்ணாம்புச் சத்து மற்றும் ஆக்ஸலேட்  இருக்க வேண்டும் .இப்படி இருந்தால், அவை சிறுகுடலில் ஒன்றாய் கலந்து சிறுநீரகக் கல் தோன்றும் வாய்ப்பை குறைக்கும்