×

இதை செய்தால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை குணமாகும்

 

பொதுவாக நம் ஆயுர்வேத சிகிச்சையில் பனங்கற்கண்டுக்கு தனியிடமுண்டு .அது நம் உடலில் தோன்றும் பல நோய்களை தடுக்கிறது .அதன் படி இந்த  பனங்கற்கண்டுடுடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிட எந்த நோய்களை குணப்படுத்தலாம் என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம் 

1.சிலருக்கு சளி தொல்லையிருக்கும் .அவர்கள் பனங்கற்கண்டை வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் இதனால் சளி, இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு, போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்கும்.
2.சிலருக்கு வாய் துர் நாற்றமிருக்கும் ,அவர்கள் சிறிதளவு சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கி விடும்.
3.சிலருக்கு உடல் சோர்வுஇருக்கும் .அவர்கள் 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன், சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால், உடல் சோர்வுகள் நீங்கி, சுறுசுறுப்புத் தன்மை அதிகரிக்கும்.
4.சிலர் ஓயாமல் சளியை சிந்துவர் .அவர்கள் 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் ஆகியவற்றை பொடி செய்து, அதை பாலுடன் கலந்து குடித்து வந்தால், தீராத சளி பிரச்சனைகள் உடனே குணமாகும்.
5.சிலருக்கு கடுமையான தொண்டை வலியிருக்கும் .அவர்கள் 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால், தொண்டை வலி குணமாகும்.
6.சிலருக்கு கண்பார்வை கோளாறு இருக்கும் .அவர்கள் சிறிதளவு பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல், கண்பார்வை அதிகரிக்கும்.
7.சிலருக்கு கிட்னியில் கல் இருக்கும் .அவர்கள் 2டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கற்கள் பிரச்சினை குணமாகும்..