கிட்னியை பாதுகாக்கலேன்னா என்னாகும் தெரியுமா ?
பொதுவாக நாம் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் உயிர் வாழ கிட்னி முக்கியம் ஆகும் .அந்த இரு கிட்னியில் நாம் உயிர் வாழ ஒரு கிட்னி போதும் .இந்நிலையில் அந்த கிட்னியில் பழுது ஏற்பட்டால் அதற்கு செய்யப்படும் சிகிச்சை டயாலிசிஸ் .இந்த சிகிச்சை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு சிறுநீரகங்களின் செயல்பாடு 85 இலிருந்து 90 சதவீதம் குறைந்துவிடும் . அப்போது அந்த நிலையைத் தொடும்பொழுது அவர் டயாலிசிஸை நாடியாக வேண்டும்.
2.டயாலிசிஸ் பொறிமுறை என்பது சிறுநீரகங்களின் செயலை செய்கிறது .
3.ஆனால் சிறுநீரகங்கள் போலவே அச்சொட்டாக செயற்படாது .
4.அதாவது, கடுமையான சிறுநீரக செயலிழப்புள்ள சில நோயாளிகளுக்கு சிறுநீரகம் சாதாரணமாக செயல்படாது
5.அந்த கிட்னி செயல்படத் தொடங்கும் வரை குறுகிய காலத்திற்கு டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்படுகின்றது.
6..ஆனால் நாள்பட்ட அல்லது இறுதி கட்டத்தில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் .
7.இப்படி கிட்னி செயலிழப்பு ஏற்பட்டால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை உங்கள் வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்ய வேண்டும்.
8.சிறுநீரகங்கள் செய்யும் துப்பரவுப் பணியை உடலுக்கு வெளியே செயற்கை சிறுநீரக இயந்திரக் கருவியில் இருக்கும் செயற்கைச் சிறுநீரகச் சவ்வு வழியாகப் பிரித்தெடுத்து விடுகிறது
9.அது ரத்தத்தைச் சுத்தம் செய்து மீண்டும் உடலுக்குள் செலுத்துவதே டயாலிசிஸ் ஆகும்.