கருவேப்பிலையை அரைத்து மோருடன் கலந்து குடித்து வந்தால் எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?
உணவில் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் கருவேப்பிலையின் நன்மைகள் அனைவருக்கும் தெரிவதில்லை. ஏனெனில் நம்மில் பெரும்பாலானோர் உணவில் இருந்து கருவேப்பிலையை தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் இந்த கறி வேப்பிலையை பச்சையாக காலையில் சாப்பிட்டால் கூந்தல் வளர்ச்சிக்கும் ,உடலில் உள்ள பல பிரச்சினைகளை சரி செய்யவும் பயன் படுகிறது .தினம் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை சாப்பிட்டால் தொப்பை குறையும் ,சர்க்கரை நோய் கட்டுக்குள் இஇருக்கும் ,மேலும் ரத்த சோகை நோய் குணமாகும் .,செரிமான பிரச்சினை சரியாகும் ,கல்லீரல் நன்றாக தனது பணியை செய்யும் ,சளி தொல்லை குணமாகும் ,மேலும் இதன் நண்மைகளை பார்க்கலாம்
1.கொசுறாக காய்கறி கடையில் கிடைக்கும் கறிவேப்பிலையில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் சி (Vitamin-C) போன்ற சத்துகள் உள்ளன
2.தினமும் காலையில் மலிவாக விற்கும் கருவேப்பிலை இலையை அரைத்து மோருடன் கலந்து குடித்து வந்தால் இளநரை மறைந்து முடி கருப்பாக மாறி இளமையாக காட்சி தருவீர்கள்
3. ஆறு மாதம் தொடர்ச்சியாக காலையில் கருவேப்பிலை இலையை அரைத்து குடித்து வர வேண்டும் இதனால் உங்கள் இளநரை அனைத்தும் முற்றிலும் மறைந்து விடும்