×

இந்த இலையின் சாற்றை  தடவினால்  மூட்டுவலி படிப்படியாக குறைந்து வரும்

 

பொதுவாக நம் வீட்டருகே விளைந்துள்ள பல கீரைகளில் ஏராளமான மருத்துவ குணம் அடங்கியுள்ளது .அதிலும் குறிப்பாக குப்பை மேனி கீரை ,பொன்னாங்கண்ணி கீரை ,அரை கீரை ,சிறு கீரை ,கற்பூர வள்ளி இலைகள் போன்ற பல்வேறு மூலிகைகள் உள்ளன .இந்த பதிவில் கற்பூர வள்ளியில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகளை பாக்கலாம் 

1.உடலின் ஆரோக்கியம் காக்க ,ஒரு பாத்திரத்தில் கற்பூரவல்லி இலையை போட்டு சூடாக்க வேண்டும். 
2.பின்னர் அதன் சாற்றை பிழிந்து எடுத்து, நெற்றி, மார்பில் தடவினால் சளி வெளியேறும்.  
3.கற்பூரவள்ளி சாற்றை பூச்சி கடித்த இடத்தில் தடவினால் நிவாரணம் கிடைக்கும் 
4.கற்பூர வள்ளியில்  உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பை தடுக்கும். 
5.கற்பூர வள்ளியை சிறிய காயங்கள், கீறல்களில் தடவினால்  இது பயனுள்ளதாக இருக்கும்.  
6.கற்பூர வள்ளி இலைகளை அரைத்து அதன் சாற்றை  தடவினால்  மூட்டுவலி படிப்படியாக குறைந்து வரும். 
7.உடலின் மற்ற இடங்களில் கற்பூர வள்ளிஇலையை சாறெடுத்து தடவினாலும் வலி குறையும் 
8..கற்பூரவள்ளியை சாறாக எடுத்து குடித்து வந்தால், வயிறு தொடர்பான சிக்கல் மறையும் 
9.கற்பூரவள்ளியை சாறாக எடுத்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்  
10.கற்பூரவள்ளியை சாறாக எடுத்து குடித்து வந்தால் வாயு பிரச்சினை  குணமடையும்.