மல்லிகை பூவின் இலையினை சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு மருத்துவ குணமுண்டு .அந்த வகையில் மல்லிகை பூவினால் நம் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.சிலர் உடலில் வீக்கம் இருக்கும் ,இப்படி உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.
2.சில பெண்களுக்கு பால் கட்டி கொள்ளும் .இந்த தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.
3. சிலருக்கு நரம்பு தளர்ச்சி இருக்கும் ,அவர்கள் மல்லிகைப்பூக்களை நிழலில் காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
4.சிலருக்கு இம்முனிட்டி பவர் குறைவாக இருக்கும் .அவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்..
5.சிலருக்கு கிட்னி கோளாறு இருக்கும் .அவர்கள் மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், குணமாகும்.
6. சிலருக்கு கண்ணில் சதை வளரும் .மல்லிகைப் பூக்களுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி குறையும்.
7.சிலருக்கு கிட்னியில் கல் இருக்கும் ,அவர்கள் மல்லிகைப் பூக்களை பொடியாக்கி நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து விடும் .
8.மல்லிகை பூவால் மன அழுத்தம் குறைவதோடு உடல் சூடு குறையும்.
9.சிலருக்கு வாய்ப்புண் இருக்கும் ,இப்படி வாய்ப்புண் இருப்பவர்கள் மல்லிகை பூவின் இலையினை சாப்பிட்டால் நாளடவில் வாய்புண் குணமாகும் .
10.சிலர் காலாணியால் அவதிப்படுபவர்,அவர்கள் இதன் இலைச்சாறு கொண்டு தடவினால் விரைவில் குணம் கிடைக்கும்