×

பசிக்கும்போது எதெல்லாம் செஞ்சா ஆபத்து தெரியுமா ?.

 

பொதுவாக பசி வந்து விட்டால் பத்தும் பறந்து விடும் என்று ஒரு பழமொழி கூறுவதுண்டு .இந்த பசியில் பல வகையுண்டு ,அந்த வகையில் மன பசி ,கண் பசி ,வாய் பசி என்று பல வகைப்படும் .இந்த பதிவில் இந்த பல்வகை பசி பற்றி பார்க்கலாம் 
   
1.நம் மன எண்ணப்படி உணவுகளைமாற்றிக் கொள்கிறோம். 
2.பசியில் கண் பசி என்று ஒரு வகை பசியுள்ளது  .இந்த கண் பசி ,பசிக்காக சாப்பிடாமல் பிடித்ததால் சாப்பிடுவதற்கு இது நம்மை தூண்டுகிறது. 
3.சிலருக்கு சில தங்களுக்கு பிடித்தமான ஹோட்டல்களில் சமைக்கும் உணவை பார்த்தால் உடனே சாப்பிட வேண்டுமென்று தோன்றும்.இதுவும் கண் பசி  
4.இந்த நேரங்களிலும் நீங்கள் உங்கள் கவனத்தை வேறு திசையில் திருப்பி விட்டால் அந்த பசி ஓடி விடும் . 
5.அடுத்து வாய் பசி என்று ஒன்று உண்டு .ஏதேனும் உணவை சுவைக்க வேண்டும் என்று தோன்றும் ,, அந்த நேரத்தில் அவ்வுணவு  ஆரோக்கியமானதா என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். 
6.மேலும் அது மட்டுமல்லாமல் உங்கள் பசியை பூர்த்தி செய்ய உதவுமா என்றும் பாருங்கள். 
7.இந்த வாய் பசியானது திடீரென குளிர்பானம் குடிக்க வேண்டும் அல்லது சுவையான உணவு உண்ண வேண்டும் அல்லது சூடாக ஏதாவது ருசிக்க வேண்டும் போன்ற எண்ணங்களை நமக்கு ஏற்படுத்தும்..
8.அடுத்து மன பசி .நாம் சந்தோஷமாக இருக்கும் தினங்களில் சிக்கன் பிரியாணி போன்ற உணவுகளையும், நாம் சோகமாக இருக்கும் தினங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுவது இந்த மன பசி தான்.
9.இந்த மன பசியில் உள்ள ஒரு தீங்கு என்னவென்றால், நேரத்திற்குத் தகுந்தாற்போல் நாம் உணவுகளை தேர்ந்தெடுக்கும் படி இது செய்கிறது.