முடி முதல் மூளை வரை பாதிக்கும் உடல் சூடு பிரச்சினைக்கு உடனடி தீர்வு
கோடைக்காலம் தொடங்க இன்னும் சில நாள்கள் இருந்தாலும் இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. ஏற்கெனவே போதுமான அளவு பருவமழை பெய்யாததால் தண்ணீர்ப் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. ஆக, நீர்ப்பற்றாக்குறை காரணமாக சரும நோயில் தொடங்கி சிறுநீரகப் பிரச்னை, ஆசனவாய் எரிச்சல், மூலம், மலச்சிக்கல் எனப் பிரச்னைகள் அணிவகுக்கத் தொடங்கிவிட்டன.
``கோடைக்காலம் என்பதால் அதிக தாகம் எடுக்கும். எனவே போதுமான அளவு நீர் அருந்தவேண்டும். வீடு, அலுவலகம் என எல்லா இடங்களிலும் ஏ.சி நிறைந்திருக்கிறது. ஏ.சியில் இருக்கும் நேரத்தில் தண்ணீர் தாகம் எடுக்காது. அதனால், பலர் தண்ணீர் அருந்த மாட்டார்கள். இது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். தாகம் எடுக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இவைதவிர, சீசனில் கிடைக்கும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
உடல் சூடு ஏற்பட்டால் மலச்சிக்கல், வாய்ப்புண், வயிற்று வலி என ஏராளமான தொல்லைகள் ஏற்படும்.
உடல் சூட்டை குறைத்து உடலைக் குளிர்ச்சிப்படுத்தும் மற்றும் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அதிகம் உண்பது நல்லது.
ஆட்டுப்பாலை தினமும் பருகி வந்தால் உடல் சூட்டை விரைவாக குறைத்து விடலாம்.
மதியம் உணவில் மோர் கலந்த சாதத்தில் இரண்டு மூன்று சிறு வெங்காயத்தை சேர்த்து, மூன்று நாட்களுக்கு சாப்பிடவும்.
இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பதில் சிறந்த பங்கு வகிக்கிறது.
ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்கவும். மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளவும். இதை இரண்டு நாட்களுக்கு செய்யவும்.
நெல்லிக்காய் சாற்றை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
பழைய சோறு உடல் சூட்டுக்கு அதிமருந்தாக செயல்படுகின்றது