கர்ப்பிணிகளே !ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுக்க சில வழிமுறைகள்
பொதுவாக கர்ப்பிணிகள் தங்களின் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாய் வளர , ஆரோக்கியமான முறையில் அவர்கள் சாப்பிட வேண்டும்
கர்ப்பிணி பெண்களின் பிரசவகாலத்தின் முதல் பனிரெண்டு வாரங்களில் 200 மி.கி ஃபோலேட் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் குழந்தைக்கு நரம்புமண்டலக் குறைபாடுகளை எதுவும் நேராது. நாளோன்றுக்கு 600 மி.கி எடுத்துக்கொண்டால் குழந்தை பிறப்பு மகிழ்ச்சியாக அமையும்.மேலும் கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான சில டிப்ஸ்களை இந்த பதிவில் பாக்கலாம்
1.கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் சிசுவுக்கு எலும்புகள் உறுதியாக வளரவும், பற்கள் உறுதியுடன் காணப்படுவது சுண்ணாம்புச் சத்து அவசியமாகும்.
2.கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் சிசுவுக்கு தேவையான கால்சியம் பாலாடை கட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மத்தி மீன்களில் அதிகள் உள்ளன.
3.அடுத்து கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் சிசுசின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது புரதச்சத்து.
4.குழந்தைகள் திசுக்கள் மற்றும் மூளை வளர்ச்சி சரியான முறையில் வளர்ச்சி அடைய புரதச்சத்து மிக மிக முக்கியமானது
5.கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பப்பை திசுக்கள் மற்றும் மார்பகங்கள் வளர உதவுவ தோடு உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்ப தையும் புரதச் சத்து உறுதி செய்கிறது.
6.கர்ப்பிணி பெண்கள் நாளொன்றுக்கு 60-100 கிராம் புரதச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த புரத சத்துக்கள் மீன், இறைச்சி, பறவை இறைச்சி, பீன்ஸ், சீஸ், டோஃபு, பால், கொட்டை மற்றும் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது.
7.கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு பிராணவாயுவை கொண்டுச் சேர்க்க இரும்புச்சத்து மிகவும் முக்கிய மானது.
8.அதற்கு சிகப்பு இறைச்சி வகைகள், பட்டாணி மற்றும் காய்ந்த பட்டாணி வகைகளை அதிகம் சாப்பிடலாம்.
9. கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் உடல் புரதம் மற்றும் ரத்தம் தயாரிக்க போலேட் தேவை.
10.மேலும், குழந்தைக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகளை ஏற்படுவதை தவிர்க்கவும் இது உதவுகிறது.
11.இந்த சத்துக்கள் கீரை வகைகள், கமலா ஆரஞ்சுகள், பருப்பு வகைகள், பட்டாணி, பீன்ஸ் ஆகியவற்றில் ஃபோலேட் வைட்டமின் அதிகம் காணப்படும்.