வெயில் காரணமாக தலைவலி உண்டானால் என்ன செய்யணும் தெரியுமா ?
பொதுவாக கோடை காலங்களில் சரும பிரச்சினை முதல் வயிறு பிரச்சினை வரை வந்து சிலரை பாடாய் படுத்தி எடுக்கும் .இந்த சரும பிரச்சினைக்கும் உடல் உஷ்ண பிரச்சினைக்கும் வெள்ளரிக்காய் சிறந்த தீர்வை கொடுக்கும் ,.வெள்ளரிக்காய் மூலம் எப்படி உடல் உஷ்ண கோளாறை சரி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.வெயில் காரணமாக தலைவலி உண்டாகும் . இந்நேரங்களில் வெள்ளரிப்பிஞ்சு, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் போன்ற வற்றை அதிகமாக சாப்பிடலாம்.
2.வெப்பச் சோர்வு காரணமாக சிலருக்கு அதிக வாந்தி ஏற்படும் .இதற்கு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் ,அது பித்தத்தைத் தணித்து குடலுக்கு குளிர்ச்சியூட்டும்..
3.உடல் வெப்பம் அடைகின்ற போது மலச்சிக்கல் ஏற்படுகின்றது. மலம் கழிப்பதில் சிரமம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் எரிச்சலும் ஏற்படலாம்.
4.தர்பூசணியில் நார்ச்சத்து மற்றும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும்.
5.அதிக உடல் சூடு காலத்தில் வாரத்தில் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து தலை குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.
6.அதிக உடல் சூட்டின் காரணமாக முகப்பரு ஏற்படும். குறிப்பாக, வறண்ட சருமம் உள்ளவர்கள், முகப்பருவால் அவதிப்படுபவர்கள்.
7.முகப்பருவால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சைச் சாற்றைத் தடவி வருவது தீர்வு தரும்.
8.சாத்துக்குடி ஆரஞ்சு போன்றவற்றையும் எடுத்துக்கொள்ள சரும சுருக்கங்களை நீக்கி பளபளப்பாகும்.