×

முடி கொட்டி, திட்டு திட்டாயிருக்கும் இடத்தில் கொத்து கொத்தா வளர செய்யும் வழிகள்

 

இன்றைக்கு ஸ்ட்ரெஸ் காரணமாக இளம்  வயதிலேயே பலருக்கு முடி உதிர தொடங்குகிறது ,அதற்கு ஒரு சிறந்த தீர்வாக  இந்த பதிவு உ ங்களுக்கு உதவும்

தேவையானவை :

மீடியம் சைஸ் வெங்காயம் – 5

தேன் – 1/2 கப்

வாசனை எண்ணெய் – 10 துளிகள்.

தேனை அரைக் கப் (1/2) அளவு எடுத்து கொள்ளுங்கள் .அதனை மிக்சியில் அரைத்து எடுக்கப்பட்ட வெங்காயச் சாறுடன் கலக்க வேண்டும். வெங்காயச் சாறுடன் தேன் நன்றாக சேரும் வரை கலக்குங்கள்.

இந்த வெங்காய- தேன் கலவையில் இறுதியாக வாசனை எண்ணெய் 10 துளிகள் சேருங்கள். வாசனை எண்ணெய் என்றால் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை :

இப்போது இந்த கலவையை நீங்கள் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஸ்கால்ப்பாக எடுத்து இந்த கலவையை தடவுங்கள். ஸ்கால்ப்பில் படும்படியே நன்றாக தடவுவது முக்கியம். மீதமுள்ள எண்ணெயை நுனி வரை பூசுங்கள்.இப்போது உங்கள் முடி முழுவதும் மற்றும் முடி உதிர்ந்து போன இடத்திலும் தடவுங்கள்

அதனை அப்படியே 45 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரில் மைல்ட் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரம் இருமுறை செய்தால் முடி கொத்தாய் உதிர்ந்து போன இடத்த்தில் முடி வளர்ந்து உங்களை கெத்தாய் வாழ வைக்கும்