சரியான தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இது பலன் கொடுக்கும்
பொதுவாக அஸ்வகந்தா தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உண்டு
உதாரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். அதுமட்டுமில்லாமல் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி இந்த அஸ்வகந்தா மூலிகைக்கு உண்டு.எனவே இந்த பதிவில் அஸ்வகந்தா தினமும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சரியான தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த அஸ்வகந்தா மூலிகை சிறந்த மருந்தாகும்.
2.இந்த தூக்கமின்மையை போக்க அஸ்வகந்தாவை பாலில் கலந்து குடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
3.நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் சிறிதளவு அஸ்வகந்தா கலந்து குடித்து வந்தால் முகத்தில் உண்டாகும் தோல் சுருக்கங்கள் மாறி நீண்ட காலத்திற்கு இளமையை பேண முடியும்.
4.மூட்டுவலி உள்ளவர்கள் பாலில் சிறிதளவு அஸ்வகந்தா கலந்து குடித்து வந்தால் மூட்டுவலி தீரும்.
5.தினமும் காலை மற்றும் மாலை 1/4 தேக்கரண்டி அஸ்வகந்தாவுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் நாடி நரம்புகளும் வலுவடையும்.
6.இரத்த கொதிப்பை குறைப்பதில் இந்த அஸ்வகந்தா மூலிகை சிறப்பாக செயல்படும்.
7.தினமும் சிறிதளவு அஸ்வகந்தா சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி உண்டாவதுடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
8.அஸ்வகந்தா தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்கும்.
9.சிறிதளவு அஸ்வகந்தா தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடல்லாமல் நோய்கள் அண்டாது
10.பெண்களுக்கு ஏற்படும் வெண்கழிவு பிரச்சனை மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கு அஸ்வகந்தா சிறந்த மருந்தாகும்.