×

இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட்டால்  என்னாகும் தெரியுமா?

 

நாம் தினம் சாப்பிடும் உணவுகளில் புரதம் ,கார்போஹைட்ரேட் ,விட்டமின் போன்ற சத்துக்கள் உள்ளன .இவற்றை நாம் கலோரி என்கிறோம் .இந்த கலோரிகள் அதிகமாகிவிட்டால் நமக்கு உடல் எடை கூடுகிறது .ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு 2500 கலோரியும் ,பெண்ணுக்கு 2000கலோரியும் தேவை .இதில் உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி மூலம் 500 கலோரிகளை குறைக்கலாம் .உணவின் மூலம் 500 கலோரிகள் குறைக்கலாம் .இப்படி  பார்த்தால் ஒரு மாதத்தில் 2 கிலோ வரை நாம் உடல் எடை குறைக்கலாம்.ஆப்பிள் ,ஆரஞ்ச் ,மீன்களை அதிகம் எடுத்துக்கொண்டால் உடல் எடை குறைக்கலாம் 

 

ஒருவர் உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் இப்படி உணவுக்கட்டுப்பாடு அவசியம் .இப்படி டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை நிறைய சாப்பிடனும் . இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல்எப்போதும் ஸ்லிம்மாக இருக்கலாம்

அடுத்து உடல் எடை குறைக்க கருவேப்பிலை உறுதுணையாக இருக்கும் .தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் இடுப்பு  குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

மேலும் எடை குறைக்க விரும்புவோர் எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு உண்டு வரலாம் . இதனால் அதிகமான அளவு உணவை உண்ண முடியாது