வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் உடலும் குடலும் பெறும் நன்மைகள்
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு மிகுதியாக இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர். மருந்துகள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்கள் என்றே அழைக்கிறார்கள்.
முழு உடல் நலம் கொடுத்து நீண்ட வாழ்நாளைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்குத் துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்
நெய்யில் ஏறத்தாழ எட்டு விழுக்காடு அளவில் தாழ்நிலைச் செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பதனால் எளிதாகச் செரிக்கிறது. இவ்வமிலங்கள் மிகச்சிறந்த உண்ணத்தக்க கொழுப்புகள் ஆகும். மேலும் நெய்யைத் தவிர பிற தாவர எண்ணெய்கள் எதிலும் இவை காணப்படுவதில்லை. நெய், மீன் எண்ணெய் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தத் தாவர எண்ணெயிலும் கொழுப்பிலும் உயிர்ச்சத்து ஏ கிடையாது. நெய்யின் அமைப்பு, நிறம் மற்றும் சுவை போன்றவை வெண்ணெய் தரம், பயன்படுத்தப்படும் பால் மற்றும் கொதிக்கும் நேரத்தின் காலத்தைப் பொறுத்தது.
ஆயுர்வேதம் அடிப்படையில் காலி வயிற்றில் நெய் உண்டால் உடம்பில் இருக்கும் செல்களுக்கு நல்ல சார்ஜ் அளிக்கும். உடலில் உள்ள செல் வலு பெற அதிகாலையில் ஒரு தேக்கரண்டி நெய் பருக வேண்டும்.
செல்களை ஊட்டத்துடனும், சருமத்தை நல்ல பொலிவுடனும் வைத்திருக்கும் திறன் நெய்க்கு உண்டு. நெய் பருகினால் முகம் மிருதுவாகவும் பளிச்சென்றும் காணப்படும்.
மாசுக்களால் ஏற்படும் அரிப்பு மற்றும் தேம்பல் போன்ற பிரச்சனைகளையும் நெய் நீக்கி விடும் .
இது natural lubricant. எனவே முட்டி வலிகளுக்கும், செல்கள் சோர்வடைவதையும் தடுக்கும் மற்றும் Arthritis போன்ற பிரச்சனைகளை போக்கும்
நெய்யில் இருக்கும் முக்கிய சத்து:
Omega 3 என்ற மிக முக்கிய கொழுப்பு அமிலம் இதில் உள்ளது. இந்த அமிலம் எலும்புகளை வலிமைபடுத்தி நோயை வராமல் பாதுகாக்கும் .
நெய்யை (ghee) வெறும் வயிற்றில் சாப்பிட்டல் மூளை (Brain) புத்துணர்ச்சியுடான் இருக்கும்.
அதோடு மூளையில் உள்ள நரம்புகளை தூண்டி ஞாபக சக்தியை அதிகப்படுத்தும்.
அதிகபட்ச மக்கள் நெய் உடல் எடையை பெறுக்கும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் தவறான கூற்று. நெய் உடலில் இருக்கும் metabolism என்ற புரதம் சுரந்து உடல் எடையை கட்டுப்படுத்தும் .
நெய் சாப்பிடுவதால் வளர் முடி ஊட்டம் அடைந்து முடி நீளமாக வளர உதவுகிறது. மேலும் முடி நல்ல வளர்ச்சியுடனும், மிருதுவாகவும் காணப்படும் மற்றும் முடி கொட்டுதலை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும்.
Lactose உள்ளவர்கள் நெய்யை கொள்ள பயப்பட வேண்டாம். ஆனால் நெய்யில் lactose குறைவாகவே இருக்கும். ஆகையால் எவ்வித ஆபத்தும் ஏற்படாது .
புற்றுநோய் வரமல் தடுக்க கூடிய ஊட்ட சத்துகள் நெய்யில் அதிகளவில் உண்டு.
எனவே வெறும் வயிற்றில் நெய் (ghee) பருகினால் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் .